புதிய பார்ட்னருடன் இணைந்த பேடிஎம்! ஆக்சிஸ் வங்கி மூலம் வங்கி சேவையைத் தொடர ஏற்பாடு!

By SG Balan  |  First Published Feb 17, 2024, 9:51 AM IST

பேடிஎம் தனது நோடல் கணக்கை ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றியுள்ளது. இதன் மூலம் முன்பு போலவே தடையற்ற வணிகப் பரிவர்த்தனைகளைத் தொடர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.


பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அதன் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு ஆர்பிஐ கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனம் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஒரு புதிய வங்கியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜனவரி மாதம் பேடிஎம் மேபெண்ட்ஸ் வங்கி பிப்ரவரி 29 முதல் அதன் வங்கிக் கணக்குகள் அல்லது வாலட்களில் புதிய டெபாசிட் தொகையையும் பெறுவதை நிறுத்த உத்தரவிட்டது. வெள்ளிக்கிழமை இந்த அவகாசம் மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Latest Videos

undefined

பேடிஎம் தனது நோடல் கணக்கை ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றியுள்ளது. இதன் மூலம் முன்பு போலவே தடையற்ற வணிகப் பரிவர்த்தனைகளைத் தொடர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. QR குறியீடுகள், சவுண்ட் பாக்ஸ் மற்றும் கார்டு மிஷின்கள் மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகும் முன்பு போலவே தொடர்ந்து செயல்படும் என்றும் பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது.

தொடர்ந்து ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு இணங்காததால் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது. வணிகர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய இன்னும் சிறிது கால அவகாசம் வழங்கவே பேடிஎம் நிறுவனத்தின் வங்கி செயல்பாடுகளை நிறுத்த காலக்கெடு நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமும் ரூ.1.5 கோடி சம்பாதிக்கும் குப்பை சேகரிப்பாளர்கள்! டெல்லியில் குப்பைக்கே இவ்ளோ வேல்யூவா!

"மார்ச் 15, 2024க்குப் பிறகு வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்டு கருவிகள், வாலட், ஃபாஸ்டேக்குகள், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகள் போன்றவற்றில் மேலும் டெபாசிட்கள் அல்லது கிரெடிட் பரிவர்த்தனைகள் அல்லது டாப் அப்கள் அனுமதிக்கப்படாது" என்று ஆர்பிஐ விளக்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகள் மற்றும் வாலட்களில் பேலன்ஸ் தீர்ந்து போகும் வரை பணத்தை எடுக்கலாம் அல்லது பயன்படுத்தலாம். ஆனால் மார்ச் 15க்குப் பிறகு அவர்கள் எந்தப் புதிய டெபாசிட்டும் செய்ய முடியாது.

பேடிஎம் வங்கிக் கணக்குகளில் தங்கள் சம்பளம் அல்லது அரசாங்க மானியங்கள் போன்றவற்றைப் பெறும்  வாடிக்கையாளர்கள் மார்ச் 15க்கு முன் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பேடிஎம் வங்கி கணக்கு தவிர, பிற வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட பேடிஎம் QR குறியீடுகளைப் பயன்படுத்தும் வணிகர்கள் தொடர்ந்து அவற்றை பயன்படுத்தலாம்.

மீண்டும் எண் 13ஐ தவிர்த்த இஸ்ரோ! ஜி.எஸ்.எல்.வி F14 ராக்கெட்டுக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கா!

click me!