
Paytm payment bank:இணையவழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் நிறுவனம் தனது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி திடீரென இன்று உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் அக்ரவால் இன்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
“ பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். வங்கியில் பல்வேறுவிதமான தணிக்கைகள் நடைபெற இருக்கின்றன.
பேடிஎம் நிறுவனமும் தகுதியான தகவல் தொழில்நுட்ப தணிக்கைநிறுவனத்தை அமர்த்தி நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஐடி நிர்வாகத்தையும் தணிக்கை செய்ய வேண்டும். தகவல்தொழில்நுட்ப தணிக்கையாளர்கள் அளிக்கும் அறிக்கைக்குப்பின் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர் சேர்ப்பது குறித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கும்”
இ்வ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.