எக்கச்சக்க வெப் சீரிஸ்களுக்கு பணம் கட்டுறீங்களா? அதை எப்படி இலவசமாக பார்க்கலாம்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க...!

By Asianet TamilFirst Published Nov 11, 2020, 4:02 PM IST
Highlights

ஆனால் பல சேவைகளுக்கு சந்தா செலுத்துவது என்பது செலவை அதிகரிக்கும் ஒன்றாக இருக்கும். அது மட்டுமல்லாமல், பல தளங்களை நிர்வகிப்பதும், கண்காணிப்பதும் கூட ஒரு பெரிய தொந்தரவு தான்.

இந்த 2020ம் ஆண்டு மக்களுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி மாதிரி அமைந்துவிட்டது. பயண கட்டுப்பாடுகள் முதல் வீடுகளுக்குள் முடங்கியது வரை நிறைய மாற்றங்கள் மற்றும் புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த சமயத்தில் யாராக இருந்தாலும் எல்லாருக்கும்கிடைத்த ஓய்வு, வெப் சீரிஸ் இயங்குதளங்களும், டி.வியுமே ஆகும். தொலைக்காட்சிகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் 2020 முதல் இன்று வரை அதிகரித்திருந்தாலும், வெப் சீரிஸ் தளங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. 

சந்தை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான  Velocity MR நடத்திய கணக்கெடுப்பின் படி, இந்த லாக்டவுன் நேரத்தில் 73 சதவீதம் பேர் குறைந்தது ஒரு வெப் சீரிஸ் தளத்திற்காகவது சந்தாதாரர்களாக மாறியுள்ளனர். லாக்டவுன் சமயத்தில் ஒளிபரப்பப்பட்ட வெப் தொடர்களும், நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்ட புதிய படங்களும் இதற்கான காரணமாகும். வெப் சீரிஸ் தளத்தில் வெளியான நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் மக்களுக்கு மிகவும் பிடித்து போனாதால் ஒருமுறை மட்டும் அல்லாது, பலமுறை சந்தா செலுத்த ஆரம்பித்தனர். 

ஆனால் பல சேவைகளுக்கு சந்தா செலுத்துவது என்பது செலவை அதிகரிக்கும் ஒன்றாக இருக்கும். அது மட்டுமல்லாமல், பல தளங்களை நிர்வகிப்பதும், கண்காணிப்பதும் கூட ஒரு பெரிய தொந்தரவு தான்.  அதுமட்டுமில்லாமல் உங்களுடைய வீட்டில் ஏற்கனவே டி.டி.எச் இணைப்பு இருந்தால், அது மற்றொரு செலவாகும்.

ஏர்டெல் அதை எல்லாம் உணர்ந்ததால் தான் அதன் புதிய ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் பாக்ஸ் மூலம் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொண்டு வந்துள்ளது. இது ஒரு ஸ்மார்ட் செட் - டாப் பாக்ஸ், இது பயனாளர்கள் தங்களது டி.வி.யில் சேனல்கள் மற்றும் வெப் சீரிஸ் இரண்டையும் பார்க்க வழி செய்கிறது. ஒரு சிறிய செட்-டாப் பாக்ஸ் மற்றும் ஃபயர்ஸ்டிக் மூலமாக அந்த  வேலை கச்சிதமாக நடைபெறுகிறது. இத்துடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ 5 போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு முன்னதாகவே இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நீங்கள் டி.டி.எச் மூலம் 500+ டிவி சேனல்களையும் கண்டு ரசிக்கலாம். உண்மையில், ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் பயன்பாடானது 10,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுடன் கிடைக்கிறது. 

இன்றைய இன்டர்நெட் யுகம் ஸ்மார்ட் சாதனங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் நாங்கள் கவனிக்காமல் இல்லை, அதையும் ஏர்டெல் நன்றாக உணர்ந்திருக்கிறது. அதனால் தான் ஆண்ட்ராய்டு அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் பாக்ஸால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஆஃப்களை டவுன்லோடு செய்து, சாதாரண டி.வியைக் கூட ஸ்மார்ட்  டிவியாக மாற்ற முடியும். இதனுடன் ஸ்மார்ட்போன்களை இணைக்க முடியும் என்பதால்  Chrome cast மற்றும் பலவற்றை கொண்டு திரையிடலாம்.  ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் பாக்ஸில் புளூடூத் வசதி இருப்பதால் நீங்கள் உங்கள் ஆன்லைன்  கேம்களை டி.வி. மூலமாகவே விளையாடலாம். 

ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் பாக்ஸ் மூலம் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்...

<

இவை எல்லாமே உங்களுக்கு ஆச்சரியமானதாக இருந்தாலும், உங்க செலவு பிரச்சனையை தீர்க்காது இல்லையா?. அதற்கும் ஒரு சூப்பரான குட் நியூஸ் இருக்கு.  ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் பாக்ஸ் மற்றும் வெப் சீரிஸ் சந்தாவை நீங்கள் முற்றிலும் இலவசமாக பெறலாம். ஆம், அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், பிராட்பேண்ட் சேவையான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்பை பெற்றால் மட்டும் போதும், மற்ற அனைத்தையுமே இலவசமாக பெற முடியும். இதை வேற மாதிரி சொல்வது என்றால்,  இன்டர்நெட் சேவையுடன் சேர்த்து நீங்கள் அளவற்ற பொழுதுபோக்கு அம்சங்களையும் இலவசமாக பெறுகிறீர்கள். இப்ப 2020 இன்னும் கொஞ்சம் சிறப்பானதாக மாறிவிட்டது இல்லையா? .

click me!