50 பைசாவுக்கு டீ விற்ற சென்னை பெண்.. இப்போது ஒரு நாள் வருமானம் ரூ.2 லட்சம்.. அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?

By Ramya sFirst Published Dec 18, 2023, 12:29 PM IST
Highlights

பாட்ரிசியா நாராயண் சுயமாக உருவான தொழிலதிபர் ஆவார். அவர் சந்தீபா சங்கிலி உணவகத்தின் இயக்குனராக இருக்கிறார்..

உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதில் ஆர்வமும், விடா முயற்சியும் உறுதியில் இருந்தால் வெற்றி நிச்சயம்.  நீங்கள் மிகவும்கடினமான சூழலில் இருந்தாலும், விடா முயற்சியுடனும், மன உறுதியுடனும் செயல்பட்டால் உங்கள் இலக்கில் வெற்றி பெற முடியும். அதற்கு சான்றாக பாட்ரிசியா நாராயணன் என்ற பெண் தொழிலதிபரின் ஊக்கமளிக்கும் கதை உள்ளது. 

பாட்ரிசியா நாராயண் சுயமாக உருவான தொழிலதிபர் ஆவார். அவர் சந்தீபா சங்கிலி உணவகத்தின் இயக்குனராக இருக்கிறார்.. அவர் 2010 ஆம் ஆண்டில் FICCI சிறந்த தொழில்முனைவோர் விருதைப் பெற்றார். பாட்ரிசியா தனது உணவக வணிகத்தைத் தவிர, ஆம்புலன்ஸ் சேவையையும் நடத்தி வருகிறார். ஆனால் அவர் இந்த இடத்திற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குடிப்பழக்கம் கொண்ட கணவரால் திருமண உறவில் ஏராளமான சிக்கல்களை சந்தித்த அவர், கணவரை விட்டு பிரிந்தார். எனினும் அவர் தன்னைத் தவிர இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவருக்கு சமைப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். எனவே பல்வேறு புதிய உணவுகளை சமைத்து சமையலில் உள்ள ஆர்வத்தை ஒரு தொழிலாக மாற்ற முடிவு செய்தாள். அம்மாவிடம் நிதிக் கடன் பெற்று, வீட்டில் ஊறுகாய், ஜாம் ஆகியவற்றை தயாரிக்க தொடங்கினார்.. இந்த பொருட்கள் ஒரே நாளில் விற்று தீர்ந்துவிட்டன. 

தனது விற்பனையை அதிகரிக்கவும், அதிக பார்வையாளர்களை சென்றடையவும், சென்னையில் உள்ள பரபரப்பான பொது இடங்களில் ஒன்றான மெரினா கடற்கரைக்கு அருகில் ஒரு தள்ளுவண்டியை அமைக்க பாட்ரிசியா முடிவு செய்தார். இரண்டு மாற்றுத்திறனாளிகளை தனது உதவிக்காக பணியமர்த்தினார்.

முதல் நாள் வேலையில், ஒரே ஒரு கப் காபி மட்டும் தான் விற்றால்,, ஆனால் அவள் கைவிடவில்லை. அடுத்த நாளே அவளது விற்பனை ரூ. 700. பின்னர், அவர் தனது மெனுவில் சாண்ட்விச்கள், பிரஞ்சு ஃபிரைஸ் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றைச் சேர்த்தார். 1982 முதல் 2003 வரை, அவர் தனது தொழிலைத் தொடர்ந்தார் மற்றும் அவரது குடும்பத்தை ஆதரிக்க போதுமான பணத்தை சம்பாதித்தார்.

இதனிடையே குடிசை மாற்று வாரியத்தின் தலைவர் பாட்ரியாவின் உணவுகளின் தரத்தை பார்த்து ஈர்க்கப்பட்டார். அவர் தனது அலுவலகத்தில் உள்ள கேண்டீனைக் கண்காணிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கினார். அதன் பிறகு சென்னையில் உள்ள ஒவ்வொரு அலுவலகத்திலும் புதிய கிளைகளைத் திறக்க ஆரம்பித்தார். 1998 இல், அவர் சங்கீதா உணவக வணிகத்தில் பங்குதாரரானார்.

வருமான வரியை மிச்சப்படுத்த இந்த 5 வழிகளை பின்பற்றினால் போதும்.. இதை கொஞ்சம் படிங்க..

2006 ஆம் ஆண்டில், பாட்ரிசியாவும் அவரது மகனும் சந்தீபா என்ற உணவகத்தைத் திறந்தனர். விரைவில், பாட்ரிசியா நாராயணின் உணவகச் சங்கிலி தமிழ்நாடு முழுவதும் பரவலாக வளர்ந்து, அவரை கோடீஸ்வரராக்கியது. சந்தீபா உணவகங்கள் தினசரி வருவாய் ரூ. 2 லட்சத்திற்கு மேல் உள்ளது., மேலும் பாட்ரிசியா நாராயணின் மொத்த நிகர மதிப்பு ரூ. 100 கோடியாகும். அவரின் உணவு வகைகள் முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உணவு தயாரித்து கொடுத்து வருகிறதுஅவரின் நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். 

click me!