வாரத்தில் 5 நாட்கள் வேலை மாற்றம்: வங்கிகள் இன்று செயல்படுமா? விடுமுறைகளில் மாற்றமா?

By Manikanda Prabu  |  First Published Dec 16, 2023, 12:25 PM IST

வாரத்தில் 5 நாட்கள் வேலை மாற்றம் காரணமாக வங்கிகள் இன்று செயல்படுமா அல்லது மூடப்பட்டிருக்குமா என்று பலருக்கும் குழப்பம் நிலவுகிறது


இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் பொதுவாக சனிக்கிழமைகளில் செயல்படாது. இது வாடிக்கையாளர்களுக்கு வருகைத் திட்டமிடுவதில் சில குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனிடையே, வங்கிகள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்; இரண்டு நாட்கள் விடுமுறை விட திட்டமிடப்பட்டுள்ளதாக சமீபத்திய ஊகங்கள் இக்குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளன.

எனவே, வங்கிகள் இன்று திறக்கப்பட்டுள்ளதா? விடுமுறைகளில் ஏதேனும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதா என்ற குழப்பத்துக்கு இங்கு  தீர்வு காண்போம். வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் உள்ளது. அதன் மூலம் மக்கள் தங்கள் வங்கி செயல்பாடுகளை திட்டமிடலாம்.

Tap to resize

Latest Videos

வாரத்தில் 5 நாட்கள் வேலை மாற்றம் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. தற்போதைய நிலவரப்படி, வங்கிகள் பாரம்பரிய அட்டவணையை கடைபிடிக்கின்றன. அதன்படி, மாதத்தில் இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளும, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகள் செயல்படாது. இதனால், சனிக்கிழமையான இன்று வங்கிகள் திறந்திருக்கும்.

இந்திய வங்கித் துறை அனைத்து சனிக்கிழமைகளையும் அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கும் திட்டத்தை நிதி அமைச்சகத்திற்கு முறையாக அனுப்பியுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஐந்து நாள் வேலை முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி இணையமைச்சர் பகவத் காரத் உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்வது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

வங்கிகளுக்கு எப்போது விடுமுறை?

தற்போதைய நிலவரப்படி, வங்கி ஊழியர்களுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. மேலும் பண்டிகை நாட்களில் கூடுதல் விடுமுறைகள் இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் சேவைகள் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து செயல்படுகின்றன.

டிசம்பர் 31 தான் கடைசி.. அதிரடி மாற்றத்தை எதிர்கொள்ளும் UPI பரிவர்த்தனைகள் - நீங்கள் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!

ரிசர்வ் வங்கியின் டிசம்பர் மாத விடுமுறை பட்டியலின்படி, யுசோசோ தாம் நினைவுதினம் மற்றும் கோவா விடுதலை நாட்களுக்கு டிசம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், டிசம்பர் 25, 26 மற்றும் 30 ஆகிய தேதிகள் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம், யு கியாங் நங்பா கொண்டாட்டம் ஆகியவற்றுக்கு விமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறைகள் பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடும் மற்றும் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக பின்பற்றப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வங்கிகளின் முழுமையான விடுமுறை பட்டியல் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப மக்கள் தங்கள் வங்கி செயல்பாடுகளை திட்டமிடலாம்.

click me!