Gold Bond Scheme : முதலீடு என்றாலே பலரின் நினைவில் வரும் முதல் விஷயம் தங்கம் தான், இன்றளவும் பல பெண்கள் தங்க நகைகளின் மீது ஆசைகொள்ளும் அதே நேரம், அதனை ஒரு முதலீடாகவும் பார்க்கின்றனர் என்றால் அது மிகையல்ல.
இந்த நிலையில் தங்கத்தில் முதலீடு செய்யும் நோக்கத்தோடு மட்டும் அதை வாங்க விரும்புபவர்களை இலக்காக கொண்டு கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது, அதுதான் எஸ்ஜிபி எனப்படும் தங்க பத்திர திட்டம், Sovereign Gold Bond Scheme - SGB. இந்த திட்டத்தின் கீழ் ஒரு தங்க நகையை காசாகவோ அல்லது ஆபரணமாகவோ வாங்காமல் அதை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் முதலீடு செய்து அதற்கான பலனை அதை பெறுபவர்கள் அடைய முடியும்.
இதில் இருக்கும் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் தங்கத்தை பாதுகாப்பதற்கான சிரமம் இதில் பெரிய அளவில் குறைக்கப்படுகிறது. மேலும் தங்க நகைகளை அல்லது காசுகளை பாதுகாப்பதை விட தங்க பத்திரத்தை பாதுகாப்பது சற்று எளிமையானது. அதிலும் குறிப்பாக இந்தியாவைப் போன்ற வளர்ந்து வரும் அதே சமயம் ஆன்மீக அஸ்திவாரத்தை பலமாகக் கொண்ட நாட்டில் தங்கத்தின் புழக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.
கடன்கள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்திய ஸ்டேட் வங்கி! எம்.சி.எல்.ஆர். விகிதமும் 15% அதிகரிப்பு!
ஆகையால் இந்த தங்க பாண்டுகள் தற்பொழுது மெல்ல மெல்ல பலர் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது விற்றுவரும் சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்க பாண்டுகளை வாங்க இந்திய அரசு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது. பட்ஜெட்டுக்கு முன்னதாக தங்கங்களை மலிவான விலையில் வாங்க மத்திய அரச தற்பொழுது வாய்ப்பு அளிக்கிறது. இதன்படி தங்க பத்திரத் திட்டம் 2023-24 இன் கீழ் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி இந்த திட்டம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாய்ப்பை வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி வரை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல மீண்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில வாரங்களில் மட்டுமே நேரடியாகவே இந்திய அரசு தங்க பத்திரங்களை விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்குமா? ஐஆர்சிடிசி விதி என்ன சொல்கிறது தெரியுமா?
ஆகவே இதில் முதலீடு செய்ய விரும்பும் பலரும் இந்த குறுகிய காலத்தை பயன்படுத்தி பலன் அடையலாம் என்கின்ற தகவலை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.