MCLR என்பது ஒரு வங்கி வாடிக்கையாளருக்குக் கடன் வழங்கும் மிகக் குறைந்த வட்டி விகிதமாகும். இது 10.10% இல் இருந்து 10.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) எம்.சி.எல்.ஆர். (MCLR) எனப்படும் நிதி அடிப்படையிலான கடன் விகிதம் மற்றும் அடிப்படை வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் டிசம்பர் 15, 2023 முதல் அமலுக்கு வருவதாக எஸ்பிஐ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MCLR என்பது ஒரு வங்கி வாடிக்கையாளருக்குக் கடன் வழங்கும் மிகக் குறைந்த வட்டி விகிதமாகும். இது 10.10% இல் இருந்து 10.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், MCLR அடிப்படையிலான வட்டி விகிதங்கள் இப்போது 8% முதல் 8.85% வரை இருக்கும்.
ஒருநாளுக்கான MCLR விகிதம் 8% நீடிக்கிறது. ஒரு மாதம் மற்றும் மூன்று மாத காலத்திற்கான வட்டி விகிதம் 8.15% இல் இருந்து 8.20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்திற்கான வட்டி விகிதமும் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 8.55% ஆக உள்ளது. ஒரு வருட MCLR விகிதம் 8.55% லிருந்து 8.65% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு மற்றும் மூன்று வருட காலத்திற்கான MCLR விகிதங்கள் முறையே 10 மற்றும் 15 அடிப்படை புள்ளிகள் வீதம் அதிகரித்து 8.75% மற்றும் 8.85% ஆக உள்ளன
பாரத ஸ்டேட் வங்கியின் வெளிப்புற அளவுகோலுடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதம் 9.15% ஆக உள்ளது. இது பிப்ரவரி 15, 2023 முதல் அமலுக்கு வந்தது. பிபிஎல்ஆர் விகிதம் 25 புள்ளிகள் கூடி, ஆண்டுக்கு 14.85% லிருந்து 15.00% ஆக அதிகரித்திருக்கிறது. இது டிசம்பர் 15, 2023 முதல் அமலுக்கு வரும்.