இந்தியா உலகின் நம்பர் 1 பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும்: ஜான் சேம்பர்ஸ் கணிப்பு

Published : Dec 14, 2023, 11:16 PM ISTUpdated : Dec 14, 2023, 11:40 PM IST
இந்தியா உலகின் நம்பர் 1 பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும்: ஜான் சேம்பர்ஸ் கணிப்பு

சுருக்கம்

அமெரிக்கப் பொருளாதார வல்லுநர் 2024 இல் வணிகம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் எதிர்பார்க்கப்படும் போக்குகள் குறித்த தனது கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்கப் பொருளாதார வல்லுநரும் எமரிடஸ் மற்றும் சிஸ்கோ சிஸ்டம்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜான் சேம்பர்ஸ், 2024 இல் வணிகம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் எதிர்பார்க்கப்படும் போக்குகள் குறித்த தனது கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

லிங்க்ட்இன் பதிவில் சேம்பர்ஸ் வரும் ஆண்டை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவையாகக் கருதும் நான்கு குறிப்பிடத்தக்க கணிப்புகளை விளக்கி இருக்கிறார்.

ட்விட்டரில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள ஜான் சேம்பர்ஸ், "2024 ஆம் ஆண்டிற்கான எனது கணிப்புகள் செயற்கை நுண்ணறிவு, சைபர், இந்தியா மற்றும் பொருளாதாரம் ஆகிய தொடர்பாக அமைந்துள்ளன. அடுத்த ஆண்டு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையை முக்கியமானதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

1. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

அடுத்த தசாப்தத்திற்கான போக்கை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பங்கை சேம்பர்ஸ் முன்னிலைப்படுத்தி இருக்கிறார். 2023 இல் AI தொழில்நுட்பம் விரைவான வளர்ச்சி அடைந்துள்ளது எனக் கூறியுள்ளார். பல்வேறு துறைகளில் AI தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சொல்கிறார்.

மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்புக்கு எதிரான வழக்கு: நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

2. இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவை வலுப்படுத்துவதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தி இருக்கிறார். பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு உலகளாவிய வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று கணித்துள்ளார்.

3. உலகளாவிய வளர்ச்சிக்கான பரிந்துரை

பாரம்பரியமான டாப் 10 வகை கணிப்புகளில் இருந்து விலகி, மாறிவரும் உலகின் தன்மைக்கு ஏற்ப அரசுகளும் மற்றும் வணிகத் தலைவர்களும் பொருளாதாரம், அரசியல் மற்றும் வணிகம் சார்ந்த முக்கியத் துறைகளில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும் என்று ஜான் சேம்பர்ஸ் பரிந்துரைத்துள்ளார்.

4. சேம்பர்ஸின் துல்லியமான கணிப்புகள்

கடந்த சில ஆண்டுகளில் அவரது கணிப்புகள் துல்லியமாக இருந்தள்ளதையும் ஜான் சேம்பர்ஸ் குறிப்பிட்டுள்ளார். 2020 இல் கோவிட்-19 பெருந்தொற்றின் பொருளாதார தாக்கம், 2021 இல் சீனாவில் முதலீடுகள் குறித்த எச்சரிக்கை, 2022 இல் பணவீக்க உயர்வு மற்றும் 2023 இல் நிதித்துறை மாற்றங்கள் குறித்த கணிப்புகள் ஆகியவை சரியாக இருந்திருப்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை வெளியிட தடை! கேஜேஆர் ஸ்டூடியோ விளக்கம் அளிக்க உத்தரவு

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!