பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதம், அதார் பூனாவாலாவின் கம்பெனியிடம் இருந்து மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸை வாங்குகிறது. இந்த டீல் மூலம் பதஞ்சலி இனி இன்சூரன்ஸ் துறையில் கால் பதிக்கும்.
Baba Ramdev-Adar Poonawala Deal : பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி ஆயுர்வேதம் ஒரு பெரிய டீல் செய்துள்ளது. இதன் மூலம் பதஞ்சலி ஆயுர்வேதம் மற்றும் ரஜனிகாந்தா பிராண்டின் உரிமையாளரான தர்மபால் சத்யபால் குரூப் இணைந்து கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் அதார் பூனாவாலாவின் சனோடி ப்ராப்பர்டீஸ் எல்எல்பி நிறுவனத்திடம் இருந்து மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸை வாங்கவுள்ளனர். இந்த டீல் மூலம் பாபா ராம்தேவின் கம்பெனி இனி இன்சூரன்ஸ் துறையிலும் நுழைகிறது.
மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸின் உரிமையாளர்கள் அதார் பூனாவாலா மற்றும் ரைசிங் சன் ஹோல்டிங்ஸ் ஆவர். பாபா ராம்தேவின் பதஞ்சலி மற்றும் ரஜனிகாந்தாவின் டி.எஸ் குரூப் இந்த டீலை 4500 கோடி ரூபாய்க்கு முடிக்கவுள்ளனர். இந்த டீல் 4500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெகுலேட்டரி அப்ரூவலுக்கு உட்பட்டது என்று சனோடி ப்ராப்பர்டீஸ் தெரிவித்துள்ளது.
மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் பல்வேறு பிரிவுகளில் 70-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுடன் ஜெனரல் இன்சூரன்ஸ் துறையில் அனைத்து இன்சூரன்ஸ் சேவைகளையும் வழங்குகிறது. இந்த கம்பெனி தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்த், ஆக்சிடென்டல், ஹவுஸ் இன்சூரன்ஸ், கார்ப்பரேட் புராடக்ட்ஸ்களில் ஃபயர், இன்ஜினியரிங் மற்றும் மரைன் இன்சூரன்ஸ் போன்ற சேவைகளையும் செய்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) சிஇஓ அதார் பூனாவாலாவின் சனோடி ப்ராப்பர்டீஸில் 90% பங்குகள் உள்ளன.
வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா போன்ற நாடுகளில் ஜெனரல் இன்சூரன்ஸ் மிகவும் குறைவு என்று பதஞ்சலி ஆயுர்வேதம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இந்த துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், 2047 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் வழங்க IRDAI திட்டமிட்டு வருகிறது. இதனால் இந்த துறையில் 100% நேரடி வெளிநாட்டு முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன. மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸுக்கு பதஞ்சலி ஆயுர்வேதத்தின் பெரிய நெட்வொர்க் மூலம் நிறைய பயன் கிடைக்கும். பதஞ்சலியின் புராடக்ட்ஸ் தற்போது நாடு முழுவதும் 2 லட்சம் கடைகள் மற்றும் 250 பதஞ்சலி மெகா ஸ்டோர்களில் கிடைக்கிறது. இது தவிர ரிலையன்ஸ் ரீடைல், ஹைப்பர் சிட்டி, ஸ்டார் பஜாரிலும் கிடைக்கிறது.
பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. இதுதான் லிமிட்.. வீட்டுக்கே வரி நோட்டீஸ் வரும்!