
Pan Aadhaar is Mandatory: வங்கியில் பணம் எடுத்தல் மற்றும் டெபாசிட்களுக்கு இன்று முதல்(மே-26) புதிய விதிமுறை அமலாகிறது. இதன்படி ஒருவர் வங்கியில் நிதியாண்டுக்குள் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ அவரின் ஆதார் எண் அல்லது பான் எண் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல வர்த்தக நிறுவனங்கள் வங்கியில் நடப்புக் கணக்கு தொடங்கினாலும் தொடங்கும் நபரின் பான் எண்ணையும் கட்டாயம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 10ம் தேதி அறிவிக்கையாக வெளியிட்டது. அதன்படி, “ஓர் நிதியாண்டில் ஒரு வங்கிக்கணக்கிலிருந்து, ரூ.20 லட்சம் அல்லது அதிகமாக ஒருவர் டெபாசிட் செய்தாலோ அல்லது பணம்எடுத்தாலோ பான் கார்டு எண் அல்லது பயோமெட்ரிக்ஆதாரை எண்ணை வழங்குவது கட்டாயம். அதுமட்டுமல்லாமல் நடப்புக்கணக்கு அல்லது ரொக்க கடன் கணக்கு வங்கியில் தொடங்கும்போதும் பான் கார்டு எண் வழங்குவது கட்டாயம். இது சாதாரண வங்கி மட்டுமல்ல கூட்டுறவு வங்கி, அஞ்சல வங்கிக்கும் பொருந்தும்.
இந்த புதிய விதிமுறை நடப்புக் கணக்கு தொடங்குவோர், கூட்டுறவு வங்கி, அஞ்சல வங்கியில் ரொக்க கடன் கணக்கு தொடங்குவோருக்கும் பொருந்தும். பான்கார்டு இல்லாதவர் ஒருவர் இந்த பரிமாற்றங்களைச் செய்யவதற்கு முன் 7 நாட்களுக்கு முன்பாக பான்கார்டுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த புதிய விதியைக் கொண்டு வந்ததன் நோக்கம், கணக்கில் வராத பணத்தை கணக்கில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏகேஎம் குலோபல் டேக்ஸ் பார்ட்னர் நிறுவனத்தின் சந்தீப் சேஹல் கூறுகையில் “ வங்கி, அஞ்சலகம், கூட்டுறவு வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, டெபாசிட், பணம் எடுத்தலை வெளிப்படைத்தன்மையுடன் கொண்டுவரே மத்தியஅரசு இந்த விதியைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி ரூ.20லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் வங்கியிலிருந்து எடுத்தாலோ பான் எண் வழங்குவது கட்டாயம். பணம் எடுக்கும்போது பான் கார்டு எண் வழங்கினால் அந்த பணம் எங்கு செல்கிறது என்பதை அரசால் கண்காணிக்க முடியும். சந்தேகத்துக்கிடமான பணம் டெபாசிட், பணம் எடுத்தலை கண்காணிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.