உயர்தர சிறப்பம்சங்கள் நிறைந்த OPPO A12..! செம ஆஃபர்.. இதுவே சரியான தருணம்.. மிஸ் பண்ணிடாதீங்க

By karthikeyan VFirst Published Jun 15, 2020, 4:03 PM IST
Highlights

ஓப்போ, ஏ12 என்ற உயர்தர சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. நியாயமான விலைக்கு தரமான ஸ்மார்ட்ஃபோனை வாங்கும் முனைப்பில் உள்ளவர்களுக்கு இது அருமையான சாய்ஸாக இருக்கும்.

ஸ்மார்ட்ஃபோன்கள் மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசியமான ஒரு பொருளாக மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்ஃபோன்கள் அவசியம் அதிகரித்துள்ளது. சாமானியர்கள் கைகளில் கூட ஸ்மார்ட்ஃபோன்கள் சென்று சேர்ந்துவிட்டன. நமது வாழ்வில் ஒன்றிணைந்த ஒரு பொருளாக ஸ்மார்ட்ஃபோன் திகழ்கிறது. அலுவல் ரீதியான பணிகளுக்கும் ஃபோன்கள் அவசியமாகிவிட்டன. ஸ்மார்ட்ஃபோன்களின் அவசியம் அதிகரித்ததையடுத்து, அனைவருமே அதை பயன்படுத்துவதால், ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்களுக்கு மீது பயன்பாட்டாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஸ்மார்ட்ஃபோனில் பேட்டரி பவர், டிசைன், கேமரா தரம், வேகமான செயல்திறன் ஆகியவை சிறப்பாக இருக்க வேண்டியது முக்கியம்.

அந்தவகையில், ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்களை கவரும் விதமாக அருமையான சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது புதிய ”ஓப்போ ஏ12” ரக ஸ்மார்ட்ஃபோன். மிகச்சிறந்த பேட்டரி பவர், தரமான பின்புற கேமரா, உயர்தர பாதுகாப்பு அம்சங்கள், 3டி டைமண்ட் ப்ளேஸ் டிசைன் என அனைத்துவகையிலும் அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது ஓப்போ ஏ12.

ஓப்போ ஏ12 ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்:

சேமிப்பு திறன் மற்றும் சிறப்பான செயல்திறன்:

இன்றைய சூழலில், மக்கள் தங்களது முக்கியமான ஆவணங்களின் டிஜிட்டல் பிரதிகள், ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஸ்மார்ட்ஃபோன்களில் தான் சேமித்துவைக்கின்றனர். எனவே பயன்பாட்டாளர்களின் தேவையை உணர்ந்து, ஓப்போ ஏ12 இருவிதமான சேமிப்பு திறன் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 3GB(Ram)+32GB(memory) மற்றும் 4GB(Ram)+64GB(memory) ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் 256GB அளவிலான, கூடுதல் மெமரி கார்டை பயன்படுத்த முடியும். ஓப்போ ஏ 12-ன் ஸ்டோரேஜ் திறன் சிறப்பாக இருப்பதால், பயன்பாட்டாளர்கள் அவர்களுக்கு தேவையான அப்ளிகேஷன்கள் அனைத்தையும் பயன்படுத்த முடியும். ஃபோட்டோக்கள், வீடியோக்கள், ஆவணங்கள், கேம்ஸ் என அனைத்தையும் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். உயர்தர கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இதன் செயல் திறன் அதிகம். எனவே கேம்ஸ் ஆடுவதற்கும் ஏதுவாக இருக்கும். 

சிறந்த பேட்டரி திறன்:

ஓப்போ ஏ12-ன் பேட்டரி 4230 mAh திறன் வாய்ந்தது. எனவே 8 மணி இடைவிடாது வீடியோ பார்க்குமளவிற்கு பேட்டரி திறன் வாய்ந்தது. மீடியாடெக் பி35 ஆக்டா-கோர் பிராசசர், லோட் ஆகாமல் கேம் ஆட உதவும். வீடியோக்களையும் தடங்கல் இல்லாமல் பார்க்க முடியும். நல்ல பேட்டரி திறனை பெற்றிருப்பதால், அடிக்கடி சார்ஜ் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. 8 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக வீடியோ பார்க்கலாம் அல்லது கேம் ஆடலாம். 

Avid ஃபோட்டோகிராஃப்:

ஸ்மார்ட்ஃபோன்களை வாங்கும்போது, கேமராவின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதைத்தான் மக்கள் முதலில் விசாரிக்கின்றனர். அந்தவகையில், ஓப்போ ஏ12 ஸ்மார்ட்ஃபோன் பின்புறத்தில் டுயல் கேமரா வசதி உள்ளது. 13 MP கேமரா மற்றும் 6 மடங்கு டிஜிட்டல் ஜூம் செய்ய முடியும்.

மங்கலான ஓளியில் கூட, தரமான ஃபோட்டோக்களையும் வீடியோக்களையும் எடுக்க முடியும். அதுதான் ஓப்போ ஏ12-ன் ஹைலைட். Dazzle colour mode, இருட்டிலும் தரமான ஃபோட்டோக்களை எடுக்க உதவும். ஓப்போ ஏ12 ஸ்மார்ட்ஃபோனில் எடுக்கும் ஃபோட்டோக்கள் மிகவும் இயல்பாக இருக்கும். வயது, நிறம், சருமத்தின் நிறம், தரம் ஆகியவற்றை இயல்பாக காட்டும். ஓப்போ ஏ12 கையில் இருந்தால், நீங்களும் சிறந்த ஃபோட்டோகிரஃபர் தான். 

உயர்தர பாதுகாப்பு அம்சங்கள்:

ஓப்போ ஏ12 ஸ்மார்ட்ஃபோனில் கைரேகை சென்சார் மற்றும் ஏ1 ஃபேசியல் அன்லாக் ஆப்சனும் உள்ளது. கைரேகை சென்சார், ஃபோனின் பின்பக்கம் அமைந்துள்ளது. ஏ1 முக அங்கீகார பாதுகாப்பு அம்சம், உயர்தரமானது. உங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே ஃபோனை திறந்து ஆபரேட் செய்யமுடியும். எனவே இது உயர்தர பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Add an abstract edge to your style! Introducing the , equipped with a Dual Rear Camera, 4GB RAM & 64GB ROM, 4230mAh Battery and many more features for you to explore. Sale starts from 10th June.
Know more: https://t.co/zoFISXoIO8 pic.twitter.com/h3KCqyZKjO

— OPPO India (@oppomobileindia)

கண்கவர் டிசைன்:

ஓப்போ ஏ12, பயன்பாட்டாளர்களின் விருப்பத்தை மனதில் வைத்து, இரண்டு முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. அதிகநேரம் பயன்படுத்தும்போது கண்ணில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் டிஸ்ப்ளே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 6.22’’ வாட்டர்டிராப் ஸ்கிரீன், பயன்பாட்டாளர்களின் கண்களுக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. 8.3 mm அளவில் மெல்லிய தடிமன் கொண்டதால், பயன்பாட்டாளர்கள் ஒற்றை கையில் அதிக நேரம் பயன்படுத்த முடியும். குறைவான எடை கொண்டது என்பதால், கைவலி ஏற்படாது.

3டி டைமண்ட் பிளேஸ் பேனல், ஃபோன் பிரியர்களின் கண்ணைக்கவரும் விதமாக அமைந்துள்ளது. நீலம் மற்றும் கருப்பு ஆகிய இரண்டு நிறங்களில் ஓப்போ ஏ12 கிடைக்கும்.

விலை, ஆஃபர்கள்: 

ஓப்போ ஏ12 ஸ்மார்ட்ஃபோன்களை மொபைல் கடைகளிலும் ஆன்லைனிலும் வாங்க முடியும். ஓப்போ ஏ12 3GB+32GB மாடலின் விலை ரூ.9,990. 4GB+64GB மாடலின் விலை ரூ.11,490.

வாடிக்கையாளர்களுக்கு அருமையான ஆஃபர்களும் உள்ளன. ஜூன் 21ம் தேதி வாங்கினால் கூடுதலாக 6 மாதத்திற்கான வாரண்டி கிடைக்கும். மொபைல் ஷோரூம்கள் மற்றும் கடைகளில் வாங்கினால், 6 மாதகால கூடுதல் வாரண்டியுடன், பேங்க் ஆஃப் பரோடா டெபிட் கார்டு பயன்படுத்தினால் 5% கேஷ்பேக்கும் கிடைக்கும். ஃபெடெரெல் வங்கி கிரெடிட் கார்டு மூலம் இ.எம்.ஐ முறையில் வாங்கினால், அதற்கும் 5% கேஷ்பேக் கிடைக்கும்.  Bajaj Finserv, IDFC First Bank, Home Credit, HDB Financial Services மற்றும் ICICI Bank ஆகிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மூலம் தவணை முறையில் பணம் செலுத்தும் வாய்ப்பும் உள்ளது. 

உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை தூக்கிப்போட்டு, உயர்தர சிறப்பம்சங்களுடன் கூடிய ஓப்போ ஏ12 ஃபோனை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்.
 

click me!