
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் 2 மாதங்கள் மக்கள் வீடுகளில் முடங்கியதால், பெரும்பாலானோர் வேலைக்கு செல்ல முடியாததால் வருமானம் இல்லாமல் தவித்தனர். தொழில் நிறுவனங்களும் கடும் பொருளாதார இழப்பை சந்தித்தன.
அதனால் வங்கிகளில் கடன் பெற்றோர், அதை செலுத்துவதற்கு ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் வழங்கியது ரிசர்வ் வங்கி. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி விகிதத்தை, வங்கிகள் குறைக்க ஏதுவாக ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% குறைத்தது.
ரிசர்வ் வங்கி குறைத்த ரெப்போ வட்டி விகித பலன்களை, வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகின்றன. அந்தவகையில், பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ வீதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 0.40%-ஐ குறைத்துள்ளதால் வட்டி விகிதம் 7.25%லிருந்து 6.85%ஆக குறைந்துள்ளது. எனவே வீடு, வாகனம், கல்விக்கடன் பெற்றவர்களின் வட்டி விகிதம் குறையும். அதேபோல எம்.சி.எல்.ஆர்-லிருந்து 0.30% குறைக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.