work from home: இன்னும் மனசு வர்லயா! அலுவலகத்தில் வேலை செய்ய 5 % ஐடி ஊழியருக்கு மட்டுமே ஆர்வம்: ஆய்வில் தகவல்

Published : Jun 08, 2022, 08:43 AM ISTUpdated : Jun 08, 2022, 09:30 AM IST
work from home: இன்னும் மனசு வர்லயா! அலுவலகத்தில் வேலை செய்ய 5 % ஐடி ஊழியருக்கு மட்டுமே ஆர்வம்: ஆய்வில் தகவல்

சுருக்கம்

work from home: Only 5% techies want full-time office: Report: கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடியே வேலைபார்த்து வருவதால் மீண்டும் அலுவலகத்துக்கு ஊழியர்களை அழைக்கும்போது பல்வேறு சிரமங்களை நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன.

கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடியே வேலைபார்த்துவிட்ட நிலையில் மீண்டும் அலுவலகத்துக்கு ஊழியர்களை அழைக்கும்போது பல்வேறு சிரமங்களை நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன.

அதிலும் ஐ.டி. நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களில் வெறும் 5 சதவீதம் பேருக்கு மட்டும் அலுவலகத்துக்கு நேரில் வந்து வேலைபார்க்க ஆர்வமாக இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

நாஸ்காம்-பிசிஜி ஆய்வறிக்கையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. "எதிர்காலப் பணி-2022 " என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டு சென்னையில் அறிக்கை வெளியானது. இந்த ஆய்வில் உலகம் முழுவதும் 2 லட்சம் ஐடி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.இதில் 500 ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்

 அந்த ஆய்வறகிக்கையில் கூறப்பட்டிருப்தாவது: 

“ ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுவோரில் 70 சதவீதம்பேர் ஹைபிரிட் மாடலில் அதாவது வீட்டிலிருந்தபடியேயும், அலுவலகத்துக்கு அவ்வப்போது வந்தும் பணியாற்றுவதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள். 25 சதவீதம் பேர் முழுமையாக வீட்டில் இருந்தபடியே வேலைபார்க்கவே ஆர்வமாக இருக்கிறார்கள்.5 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக அலுவலகத்துக்கு வந்து வேலைபார்க்க விரும்புகிறார்கள்.

வாரத்துக்கு ஒருநாள் முதல் 3 நாட்கள் வரை மட்டும் அலுவலகம் வந்து வேலைபார்க்க ஊழியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். உலகளவில் ஐடி ஊழியர்களில் 80 சதவீதம் பேர், வீட்டிலிருந்தபடியேயும், அலுவலகத்துக்கு நேரில் வந்தும் கலந்து வேலைபார்க்க ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

40 சதவீதம் பேர் அலுவலகத்துக்கு நேரில் வந்து வேலைபார்க்க ஆர்வம் தெரிவித்தாலும், அது வாரத்துக்கு அதிகபட்சம் 3 நாட்கள் மட்டும்தான் அலுவலகம் வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 

33 சதவீதம் பேர் முழுமையாக அலுவலகத்துக்கு நேரில் வந்து வேலைபார்க்க விரும்புகிறார்கள். அதாவது வாரத்துக்கு 3 நாட்களுக்கு மேல் அலுவலகம் வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்தபடியே வேலைப்பார்ப்பதன் மூலம் சமூகரீதியான தொடர்பு, நல்ல அலுவல் சூழல், நண்பர்களுடன் கலந்துரையாடல் ஆகியவற்றைஇழக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாஸ்காம் எஸ்விபி சங்கீதா குப்தா கூறுகையில் “ நிறுவனங்கள் தங்களின் அலுவலகத்தை மறுகட்டமைப்பு செய்து சுருக்கி வருகிறார்கள். ஊழியர்கள் ஹைபிரிட் பணிநிலைக்கு மாறி வருவதால், அலுவலகமும் பெரிதாகத் தேவைப்படவில்லை. புதிதாக வரும் நிறுவனங்கள்கூட டிஜிட்டல் முறையிலேயே பணியாற்ற விரும்புகிறார்கள். ஹைபிரிட் மாடல் என்றால், அலுவலகத்துக்கான இடம் குறைகிறது என்றில்லை, அலுவலகங்கள் பெருகும்” எனத் தெரிவித்துள்ளார்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்