online fraud complaint: ஆன்-லைன் மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? எப்போதும் கைகொடுக்கும் 5 டிப்ஸ்

By Pothy RajFirst Published Jun 23, 2022, 12:21 PM IST
Highlights

online fraud complaint :டிஜிட்டல் மயமாகிவரும் உலகில், அனைத்துமே ஆன்லைன் மயமாகி வருகிறது. பொருட்களை ஆர்டர் செய்வதலிரிருந்து, பணப்பரிமாற்றம் வரை அனைத்துமே ஆன்லைன் மூலமே நடக்கிறது. இதனால்தான் தெரிந்தோ தெரியாமலோ அனைவருமே இணையதளத்தைச் சார்ந்து இருக்கிறோம். 

டிஜிட்டல் மயமாகிவரும் உலகில், அனைத்துமே ஆன்லைன் மயமாகி வருகிறது. பொருட்களை ஆர்டர் செய்வதலிரிருந்து, பணப்பரிமாற்றம் வரை அனைத்துமே ஆன்லைன் மூலமே நடக்கிறது. இதனால்தான் தெரிந்தோ தெரியாமலோ அனைவருமே இணையதளத்தைச் சார்ந்து இருக்கிறோம். 

அதிலும் கொரோனா தொற்று காலத்தில் ஆன்லைன் பேமெண்ட் என்பது தவிர்க்கமுடியாததாகவிட்டது. இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஹேக்கர்கள், ஆன்லைன் மோசடியாளர்கள் தங்களின் மோசடி வேலைகளை கட்டவிழ்த்துவிட்டனர்.  இதனால் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன் லைன் மோசடி குறித்த புகார்களும் சைபர் கிரைமில் தொடர்ந்து அதிகரி்த்து வருகிறது.

ஆன்-லைன் மோசடியிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கவனத்துடன் செயல்பட வேண்டும். அதற்கு 5 கோல்டன் டிப்ஸ் இருக்கிறது. இதை பின்பற்றினாலே நாம் மோசடியாளர்கள் வலையில் விழாமல் தப்பிக்கலாம்.

பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுதல்

ஆன்லைனில் அதிகமாகப் பணியாற்றுவோர், பணப்பரிவர்த்தனை செய்வர்கள் மோசடியாளர்களிடம் சிக்காமல் இருக்க முதலில் செய்ய வேண்டியது பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுவதாகும். குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்டை மாற்ற வேண்டும். இதனால் ஹேக்கர்கள் நம்மை அணுக முடியாமல், மோசடி செய்ய முடியாமல் போகும்

பொதுக்கணினி வேண்டாம்

கம்ப்யூட்டர் சென்டர், வேறு நபரின் கணினி ஆகியவற்றை நமது ஆன்லைன் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தக்கூடாது. இது ஹேக்கர்கள் நம்மை எளிதாக மோசடி செய்ய நாம் செய்து கொடுக்கும் வழியாகும். ஹேக்கர்கள் எளிதாக நம்முடைய வங்கிக்கணக்கு, பாஸ்வேர்டை எடுத்துவிடவாய்ப்பு அளி்க்கும். ஆதலால், கம்ப்யூட்டர்சென்டர், வேறுஒருநபரின் கணினியில் பணப்பரிமாற்றம் செய்வதைத் தவிர்க்கலாம்

கார்டு தொலைந்தால் உடனடி புகார்

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தொலைந்தால் உடனடியாக தொடர்புடைய வங்கிக்கு தகவல் அளித்து அதை பிளாக் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யும்போது மோசடியாளர்கள் கையில் கிடைத்த கார்டுகள் மூலம் பணம் எடுத்தலைத் தடுக்க முடியும்.

சந்தேகத்துக்குரிய மின்அஞ்சல்கள்

நம்முடைய மின்அஞ்சலுக்கு சந்தேகத்துக்குரிய மின்அஞ்சல்கள், செல்போனுக்கு எஸ்எம்எஸ்கள் வரும். அதாவது அதிகமான வட்டி தரும் முதலீடு, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, இலவசப் பொருட்கள், லாட்டரி டிக்கெட் போன்ற விளம்பரங்களைக் கொண்டு மின்னஞ்சல்கள் வரும். இதை தொடாமல், கிளிக் செய்யாமல் தவிர்த்தல் பாதுகாப்பானது. அவ்வாறு கிளிக் செய்தால், ஹேக்கர்கள் நம்முடைய பணப்பரிமாற்ற விவரங்களை சில வினாடிகளில், நிமிடங்களில் எடுக்க வாய்ப்புஉண்டு

யாருடனும் பகிர வேண்டாம்

வங்கி அதிகாரிகள் ஒருபோதும் ஏடிஎம் பின் எண், பாஸ்வேர்ட், வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை தொலைப்பேசிவாயிலாக கேட்கமாட்டார்கள். அவ்வாறு ஏதேனும் அழைப்பு செல்போனுக்கு வந்தால், அந்த எண்ணை குறித்து வைத்து சைபர் கிரைமுக்கும், வங்கி நிர்வாகத்துக்கும் புகார் அளிக்கலாம். யாரிடமும் ஓடிபி, பாஸ்வேர்ட், வங்கி கணக்கு விவரங்களையும் பகிரக்கூடாது.
 

click me!