term insurance :திருமணம் ஆகாதவர்களுக்கு டெர்ம் இன்சூரன்ஸ் தேவையில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். திருமணம் செய்தவர்கள் மட்டும்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று தவறான நம்பிக்கையை வைத்துள்ளனர்.
திருமணம் ஆகாதவர்களுக்கு டெர்ம் இன்சூரன்ஸ் தேவையில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். திருமணம் செய்தவர்கள் மட்டும்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று தவறான நம்பிக்கையை வைத்துள்ளனர்.
திருமணம் ஏராளமான பொறுப்புணர்வை, நிதிப்பொறுப்பை ஆண், பெண் இருபாலருக்கும் கொண்டுவரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனாலும் டெர்ம் இன்சூரன்ஸ் இருவருக்குமே முக்கியமானது. திருமணம் செய்யாதவர்கள், தனியாக வாழ்பவர்கள் அனைவருக்கும் டெர்ம் இன்சூரன்ஸ் என்பது கட்டாயம்தான்.
உங்களுடன் இருப்போருக்காக!
நீங்கள் தனியாக வசித்தாலும், உங்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் இல்லை, சார்ந்து இல்லை என்று அர்த்தம் ஆகாது. உங்கள் பெற்றோருக்குநீங்கள் ஒரு குழந்தையாகக் கூட இருக்கலாம். உங்கள் பெற்றோர் ஓய்வு பெற்றவர்களாக இருக்கலாம், உடன்பிறந்தவர்கள் இளையவர்களாக இருக்கும்போது உங்களைச் சார்ந்துதான் இருப்பார்கள்.
இந்தசூழலில் திடீரென நீங்கள் துரிதர்ஷ்டமாக உயிரிழப்பைச் சந்திக்க நேர்ந்தால், உங்களை நம்பி இருக்கும் வயதான பெற்றோர், இளைய சகோதர, சகோதரிகள் நிலையை நினைத்துப் பார்த்ததுண்டா. அவ்வாறு நீங்கள் இறக்க நேர்ந்தால், அடுத்ததாக உங்கள் பெற்றோர் வாழ்நாளை எவ்வாறு கழிப்பார்கள், அன்றாட செலவுக்கு பணத்துக்கு எங்கே செல்வார்கள், உங்களை நம்பி இருக்கும் சகோதர,சகோதரிகள் கல்விச்செலவுக்கு என்ன செய்வார்கள்.
கல்வி என்னவாகும். குடும்பச் செலவை எவ்வாறு சரிகட்டுவார்கள். இதை நினைத்துப் பார்த்து, நம்மை சார்ந்தவர்கள் நிதிச்சிக்கலில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது அவசியமாகும். நாம் மறைந்தாலும், நம்மால் கிடைக்கும் காப்பீடு பணம் நம்மை சார்ந்தவர்களை வாழவைக்கும் அதற்கு டெர்ம் இன்சூரன்ஸ் அருமையான திட்டம்
கடன் பிரச்சினை
உங்கள் குடும்பத்தில் வீட்டுக்கடன் , சகோதர சகோதரிகளுக்கான கல்விக்கடன் போன்றவை செலுத்தி முடிக்காமல் இருக்கும். திடீரென நீங்கள் உயிரிழப்பைச் சந்திக்கும்போது, அந்த கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால், அந்தக் கடன் அனைத்தும் குடும்ப உறுப்பினர்கள் தலையில் விழும்.
ஏற்கெனவே உயிரிழப்பைச் சந்தித்த உங்கள் குடும்ப உறுப்பினர்களை பணச்சுமை மேலும் அழுத்தும்.ஆனால், நீங்கள் டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால், ஒருவேளை நீங்கள் திடீரென உயிரிழப்பைச் சந்திக்க நேர்தாலும்கூட அதில்கிடைக்கும் பணத்தின் மூலம் குடும்ப சுமைகளை, கடன்களை குடும்ப உறுப்பினர்களால் சமாளிக்க முடியும். ஆதலால் குடும்ப உறுப்பினர்களை உங்கள் காலத்துக்குப்பின்பும் கடன் எனும் புதைகுழியில் தள்ளாமல் இருக்க டெர்ம் இன்சூரன்ஸ் கட்டாயம் எடுக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீடும் கிடைக்கும்
வயதானவர்கள்தான் நோயுடன் இருப்பார்கள் என்பது பழையகதை. இன்றுள்ள வாழ்க்கை முறைக்கு 40வயதுக்குள் இருப்போருக்கே இதயநோய்கள் வந்துவிடுகிறது. முறையற்ற வேலைநேரம், தவறான உணவுமுறை, நேரம் கடந்து உணவு உண்ணுதல், மது,புகைப்பழக்கம் போன்றவை மேலும்உடல்நிலையை மோசமாக்குகிறது. நோய்கள், வயது, இனம், மதம், பாலினம் பார்த்து தாக்குதவில்லை.
திடீரெனநீங்கள் சிக்கலான நோயால் பாதி்க்கப்பட்டால் அதனால் ஏற்படும் மருத்துவச் செலவை பெற்றாோரால் சமாளிக்க முடியுமா. உங்களுக்கு வேலைஇழப்பு ஏற்பட்டு, உங்கள் மருத்துவச் செலவை உங்கள் குடும்பத்தாரால் கவனிக்க முடியுமா. இதற்காகத்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். டெர்ம் இன்சூரன்ஸ் வாழ்நாள் காப்பீடு மட்டுமல்ல, மருத்துவ காப்பீடும் வழங்குகிறது. ஆதலால், அசாதாரண சூழலை எதிர்கொள்ள டெர்ம் இன்சூரன்ஸ் அவசியம்
வரிச்சலுகை
டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்தால் வருமானவரிச்சட்டம் 1961ன்கீழ் 80சி பிரிவில் வருமானவரி விலக்கு கோர முடியும். நாம் செலுத்தும் ப்ரீமியத்தின் அளவுக்கு ஏற்ப ரூ.1.50 லட்சம்வரை விலக்கு கோரலாம். 80டி பிரிவில் தீவிர சிகிச்சையின் பெயரில் ரூ.25ஆயிரம்வரை விலக்கு கோர முடியும்.
ஆதலால், சிங்கலாக இருந்தாலும், திருமணம் செய்திருந்தாலும், திருமணம் ஆகாதவர்களாக இருந்தாலும் டெர்ம் இன்சூரன்ஸ் அவசியமானது.