
தேசியப் பங்குச்சந்தையில் ரகசிய விவரங்களை பல்வேறு பங்குதரகு நிறுவனங்களுக்கு பகிர்ந்த கோ-லோகேஷன்(colaction scam) ஊழல்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியம்தான் இமயமலை யோகி,அவர்தான் ரகசிய மின்அஞ்சலையும் உருவாக்கியவர் என நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
சட்டவிரோத நியமனம்
தேசியப் பங்குச்சந்தையின்(NSE) தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டுவரை சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார். அவரின் பதவிக்காலத்தில் அவரின் ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஊதியத்தை வாரி வழங்கிய சித்ரா, இமயமலை சாமியார் ஒருவரின் ஆலோசனையின்படிதான் அவரை நியமித்ததாகக் கூறப்பட்டது.
குறுகிய காலத்தில் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு கோடிக்கணக்கில் ஊதிய உயர்வு கிடைத்தது குறித்து பல்வேறு புகார்கள் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபியிடம் சென்றது. இதுதொடர்பாக செபியும் விசாரணை நடத்தியது.
இமயமலை சாமியார்
இந்த விசாரணையில் சித்ரா கடந்த 20 ஆண்டுகளாக இமயமலை சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படிதான் என்எஸ்இ அமைப்பை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல், ரிக்யஜுர்சாமா என்ற பெயரில் மின்அஞ்சல் உருவாக்கி, அதில் என்எஸ்இ ரகசியத்தகவல்கள் அனைத்தும் சாமியாரிடம் சித்ரா பகிர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, என்எஸ்இக்கு இழப்புஏற்படுத்தியதாகக் கூறி சித்ராவுக்கு ரூ3 கோடி அபராதமும், ஆனந்த்துக்கு ரூ.2 கோடி அபராதமும் செபி விதித்தது.
கோ-லொகேஷன் ஊழல்
இதற்கிடையே சித்ரா பணிக்காலத்தில், என்என்சி சர்வர்கள் வைக்கும் இடத்தில், பங்குவர்த்தகம், பங்குவிலை, பிரமாற்றம் ஆகிய தகவல்களை விரைவாகப் பெறுவதற்காக சில குறிப்பிட்ட பங்கு தரகர்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன.இது தொடர்பாக எழுந்தபுகாரில் சிபிஐ கடந்த 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தவழக்கில் ஆனந்த் சுப்பிரமணியத்தை கடந்த மாதம்24ம் தேதி சிபிஐ கைது செய்தது, கடந்த வாரம் சித்ரா ராமகிருஷ்ணாவையும் சிபிஐ கைது செய்தது. இருவரையும் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
மின்அஞ்சல்
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று அறிக்கை தாக்கல் செய்தது அதில் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்படுவதாவது “ என்எஸ்இ முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணாவை வழிநடத்திய இமயமலை யோகியும், அந்த யோகியும், சித்ராவும் தகவல்களை பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்ட மின்அஞ்சலை உருவாக்கியதும் வேறு யாருமில்லை, ஆனந்த் சுப்பிரமணியம்தான் என சந்தேகிக்கிறோம்
இமயமலை யோகியும் இவர்தான், மின் அஞ்சலை உருவாக்கியதும் ஆனந்த் சுப்பிரமணியம்தான். சித்ராவிடம் தகவல்களைப் பெறுவதற்காக ரிக்யஜுர்சாம(rigyajursama@outlook.com) என்ற மின்அஞ்சல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின்அஞ்சலை இயக்கியது யார் என்பதுகுறித்துதான் விசாரணை நடத்தி வருகிறோம்.
இதைப்படிக்க மறக்காதிங்க: NSE scam:இப்படி ஊழல் செய்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள்: சித்ரா வழக்கில் சிபிஐ நீதிமன்றம் காட்டம்
என்எஸ்இ ஊழல் குறித்து நடத்தப்பட்ட தடவியல் கணக்குத் தணிக்கையில் மின்அஞ்சல்களை ஆய்வு செய்தஅதிகாரிகள் செபியிடம் அளித்த அறிக்கையில் இயமலை சாமியார் ஆனந்த் சுப்பிரமணியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க செபி மறுத்துவி்ட்டது”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.