nse co location scam: எஸ்எஸ்இ ஊழல்: 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு

By Pothy RajFirst Published May 21, 2022, 2:12 PM IST
Highlights

nse co location scam :தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் ஊழல் வழக்கில், சிபிஐ அதிகாரிகள் பல்வேறு நகரங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் ஊழல் வழக்கில், சிபிஐ அதிகாரிகள் பல்வேறு நகரங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் சோதனை  நடத்தி வருகிறார்கள்.

மும்பை, குஜராத்தின் காந்தி நகர், டெல்லி, நொய்டா, குருகிராம், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருக்கும் பங்கு தரகர், அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் இந்த ரெய்டு நடப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

என்எஸ்இ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே, சில குறிப்பிட்ட பங்குதரகு நிறுவனங்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன. 

இதனால், பங்குவிற்பனை, விலை, பரிமாற்றம் குறித்த தகவல்கள் விரைவாக அந்த தரகு நிறுவனங்களுக்குக் கிடைத்தால், கோடிக்கணக்கில் லாபமீட்டின.இது தொடர்பான புகார் எழுந்ததையடுத்து, கடந்த 2018ம்ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வந்தது.

இதற்கிடையே சித்ரா தனது பதவிக்காலத்தில் தனக்கு ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். அவருக்கு குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் ஊதிய உயர்வு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து செபி விசாரி்த்து, சித்ராவுக்கு ரூ.3 கோடி, ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு ரூ.2 கோடி அபராதமும் விதித்தது.

கோ-லொகேஷன் வழக்கு குறித்து விசாரித்த சிபிஐ, ஆனந்த் சுப்பிரிமணியம், சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தியது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். 

கோ-லொகேஷன் வழக்கில் ஓபிஜி செக்யூரிட்டீஸ் என்ற பங்குதரகு நிறுவனம் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. என்எஸ்இ இயக்குநராக சித்ரா, அவரின் ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியம் இருந்தபோது, ஓபிஜி செக்யூரிட்டீஸ் நிறுவனத்துக்கு சார்பாக ஏராளமான சலுகைகள் செய்ததாக சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஒபிசி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிறுவனரும் பங்கு தரகரான சஞ்சய் குப்தா மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு என்எஸ்இ சர்வருக்கு அருகே ஓபிஜி நிறுவனத்தின் சர்வர்களை வைத்து மிகவிரைவாக பங்குவிற்பனை, விலை தகவல்களைப்பெற்று குப்தா ஆதாயம் அடைந்துள்ளார்.

இதற்கு துணையாக என்எஸ்இ நிறுவனத்தில் ஏராளமான உயர்அதிகாரிகளும் துணையாக இருந்துள்ளனர் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோலொகேஷன் ஊழல் வழக்குத் தொடர்பாக டெல்லி, மும்பை, குஜராத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதி்ரடி சோதனை நடத்தி வருகிறார்கள்

click me!