da hike news: ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட் ! 14% DA உயர்வு, நிலுவை தொகைக்கு மத்திய அரசு ஒப்புதல்

By Pothy RajFirst Published May 21, 2022, 12:05 PM IST
Highlights

da hike news :ரயில்வேதுறையில் 6-வது ஊதியக் குழுவின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கும், நிலுவைத் தொகையை வழங்கவும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது . இது மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேதுறையில் 6-வது ஊதியக் குழுவின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கும், நிலுவைத் தொகையை வழங்கவும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது . இது மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 

6-வது ஊதியக்குழுவின் கீழ் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி 7 சதவீதமாக இருபிரிவுகளில் வழங்கப்படுகிறது. இதன்படி, 2021, ஜூலை 1ம் தேதி முதல் 7 சதவீதமும், 2022, ஜனவரி 1ம் தேதி முதல் 7சதவீதம் என மொத்தம் 14 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது.

2022,ஜூலை1ம் தேதி வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு 189 சதவீதத்திலிருந்து 196 சதவீதமாகும்,  2022, ஜனவரி1ம் தேதி முதல் வழங்கப்படும் அகவிலைப்படி 196 சதவீதத்திலிருந்து 203 சதவீத உயர்வாகும்.

இந்த  அகவிலைப்படி உயர்வை ரயில்வே ஊழியர்கள் தங்களின் மே மாத ஊதியத்துடன் சேர்த்துப் பெறுவார்கள். ஏறக்குறைய 10 மாதங்கள் டிஏ நிலுவைத் தொகை மற்றும் ஊதியமும் கிடைக்கும்

இதற்கிடையே மத்திய அ ரசு சில நாட்களுக்கு முன் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தியது. அதில், 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரையிலான அகவிலைப்படி இன்னும் விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இது தவிர மார்ச் மாதம் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி 3 சதவீதம் அகவிலைப்படிஉயர்வுக்கும் மத்திய அமைச்சரவை அனுமதியளித்தது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ உயர்வு34 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

click me!