ஆதார் - பான் கார்டு இணைக்கவில்லையா? ரூ.1000 கட்டணம் செலுத்தி இணைப்பது எப்படி?

By SG Balan  |  First Published Jun 17, 2023, 9:09 PM IST

ரூ.1000 கட்டணத்துடன் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை கடைசி தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.


பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இலவசமாக பான் கார்டையும் ஆதார் கார்டையும் இணைப்பதற்கான கடைசி தேதி 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்தது. பின்னர் ரூ.1000 கட்டணத்துடன் இணைப்பதற்கான கடைசி தேதி முதலில் மார்ச் 31, 2023 வரை நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, பான் எண்ணை ஆதாருடன் இணைக்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், ஏற்கனவே ஆதார் - பான் கார்டுகளை இணைப்பது நல்லது. பான் மற்றும் ஆதார் எண்ணை எவ்வாறு இணைப்பது என்பது குறித்த விரிவான வழிகாட்டியை இங்கே காணலாம். இங்கே கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இரண்டு ஆவணங்களையும் இணைக்க ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

Tap to resize

Latest Videos

மீண்டும் டாஸ்மாக் மரணம்! திருச்சியில் மது அருந்திய நண்பர்கள் இருவர் சாவு

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள்  இணைக்கும் விதம்:

1. https://eportal.incometax.gov.in/ இணையதளத்திற்குச் சென்று  Link Aadhaar என்பதை கிளிக் செய்யவும்.

2. பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளீடு செய்து Validate என்பதைக் கிளிக் செய்யவும்.

3. OTP எண்ணை பயன்படுத்தி சரிபார்த்த பின்பு, Proceed on the Income Tax tile என்பதைக் கிளிக் செய்யவும்.

4. 2023-24 ஆம் ஆண்டை தேர்வு செய்து, பணம் செலுத்தும் வகையை other Receipts (500) எனக் குறிப்பிட்டு Continue என்பதை கிளிக் செய்யவும்.

5. அடுத்த பக்கத்தில் பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்தால், வங்கி இணையதளத்திற்குச் செல்லும்.

6. பணத்தை வெற்றிகரமாகச் செலுத்தியதும் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கப்பட்டுவிடும்.

கிரீன் கார்டு விதிகளைத் தளர்த்திய அமெரிக்கா! பிரதமர் மோடி பயணத்தை முன்னிட்டு அறிவிப்பு!

வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் இணைப்பது எப்படி?

1. வருமான வரித் துறையின் e-Filling இணையதளத்தில், e-Pay Tax பக்கத்திற்கு செல்லவும்.

2. Click here to go to NSDL (Protean) tax payment page for other banks என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

3. அடுத்து திறக்கும் பக்கத்தில் Challan No/ITNS 280 என்பதற்குக் கீழே உள்ள Proceed என்பதைக் கிளிக் செய்யவும்.

4.Tax Applicable (Major Head) என்ற பிரிவின் கீழ் உள்ள (0021) Income Tax (Other than Companies) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

5. Type of Payment (Minor Head) பிரிவில் (500) Other Receipts என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

6. 2023-24ஆம் ஆண்டைத் தேர்ந்தெடுத்து, தேவையான விவரங்களை உள்ளீடு செய்து, Proceed என்பதைக் கிளிக் செய்து நிறைவு செய்யவும்.

வலுக்கும் எதிர்ப்பு, வழக்கை வாபஸ் பெறுவது எப்போது? ஏசியாநெட் நிருபர் கைதுக்கு பிரபலங்கள் கண்டனம்

click me!