சொந்தமாக மொபைல் போன் இல்லை.. 750 மில்லியன் டாலரை வழங்கிய இந்திய தொழிலதிபர்!

By Ramya s  |  First Published Aug 9, 2023, 11:58 AM IST

இன்சூரன்ஸ் முதல் பங்குத்தரகு வரை அனைத்திலும் 108,000 பேர் பணியாற்றும் ஒரு கூட்டு நிறுவனமாக ஸ்ரீராம் குரூப் நிறுவனத்தை கட்டமைத்தார்.


உலகின் தனித்துவமான தொழிலதிபர்களில் ஒருவராக ஆர். தியாகராஜன் இருக்கிறார். 1974 ஆம் ஆண்டு சென்னையில் ஸ்ரீராம் குழுமத்தை ஆர். தியாகராஜன் நிறுவினார். அவரது பல பில்லியன் டாலர் வணிகமான ஸ்ரீராம் குழுமம், தற்போது செழித்து வளர்ந்துள்ளது. ஆம். இந்தியாவின் ஏழை மக்களுக்கு டிரக்குகள், டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்கள் வாங்க  கடன் வழங்குவதில் முன்னோடியான தியாகராஜன், இன்சூரன்ஸ் முதல் பங்குத்தரகு வரை அனைத்திலும் 108,000 பேர் பணியாற்றும் ஒரு கூட்டு நிறுவனமாக ஸ்ரீராம் குரூப் நிறுவனத்தை கட்டமைத்தார். குழுமத்தின் முதன்மை நிறுவனமான பங்குகள் இந்த ஆண்டு 35% க்கும் அதிகமாக உயர்ந்து ஜூலை மாதத்தில் சாதனையை எட்டியது, இது இந்தியாவின் முக்கிய பங்கு குறியீட்டை விட 4 மடங்கு அதிகம்.

ஒரு குறிப்பிட்ட வருமான இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன்களை வழங்கி வரும் நிலையில், குறைந்த வருமானம் கொண்ட கடன் வாங்குபவர்களுக்கு தனது நிறுவனத்தின் மூலம் கடன் கொடுத்தார். தனது சிறிய வீடு மற்றும் $5,000 காரில் திருப்தி அடைந்து தனது செல்வத்தை ஒரு சில ஊழியர்களுக்குக் கொடுத்தார்.

Tap to resize

Latest Videos

இப்போது 86 வயதாகி, ஆலோசகராக இருக்கும் யாகராஜன், ப்ளூம்பெர்க் நியூஸ் உடனான ஒரு அரிய நேர்காணலில், பல தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் பேசிய அவர், கடன் வரலாறுகள் அல்லது வழக்கமான வருமானம் இல்லாதவர்களுக்கு கடன் வழங்குவது என்பது கருதப்படுவது போல் ஆபத்தானது அல்ல என்பதை நிரூபிப்பதற்காகத் தான் தொழில்துறையில் நுழைந்ததாகக் கூறினார். தனது அணுகுமுறையில் அல்லது ஸ்ரீராம் குழுமத்தின் பங்குகளை வழங்குவதற்கான தனது முடிவில் அசாதாரணமானது எதுவுமில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஸ்ரீ ராம் குழுமத்தின் பங்குகளின் மதிப்பு $750 மில்லியனுக்கும் அதிகமாகும்.

ரூ.19,000 கோடி சொத்து! இந்தியாவின் 3வது பணக்கார பெண்.. அட நம்ம சென்னையை சேர்ந்தவங்க தான்..

ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளித்த அவர் "நான் கொஞ்சம் இடதுசாரி."ஏற்கனவே நல்ல வாழ்க்கையை வாழும் மக்களின் வாழ்க்கையை மேலும் இனிமையாக்குவதில் நான் ஒருபோதும் ஆர்வமாக இருந்ததில்லை. மாறாக, பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் மக்களின் வாழ்க்கையில் சில விரும்பத்தகாத தன்மைகளை அகற்ற விரும்பினேன்” என்று தெரிவித்தார்.

தியாகராஜனின் வாழ்க்கை, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் பயன்படுத்தப்படாத வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது, ஏனெனில் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களில் அதிகமான மக்கள் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள். இந்தியாவின் வங்கிச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் அழுத்தம் கொடுத்தாலும், நாட்டின் நான்கில் ஒரு பகுதியினர் இன்னும் முறையான நிதி அமைப்பைப் பெறவில்லை. உலக வங்கியின் கூற்றுப்படி, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அதை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை.

ஏழைகளுக்கு கடன் கொடுப்பது சோசலிசத்தின் ஒரு வடிவம், தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஆனால் வங்கி இல்லாதவர்களுக்குக் கிடைக்கும் அபராத கட்டணத்தை விட மலிவான விருப்பத்தை வழங்குவதன் மூலம், தொழில் பாதுகாப்பாகவும் லாபகரமாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபிக்க முயன்றார். இப்போது தொழில் பெரிய வணிகமாகிவிட்டது. இந்தியாவில் சுமார் 9,400 நிழல் வங்கிகள் உள்ளன, அவை பெரும்பாலும் வழக்கமான கடன் வழங்குபவர்களுக்கு நிதி சேவைகளை வழங்குகின்றன.

தியாகராஜன் உருவாக்கிய சாம்ராஜ்யம்

உண்மையில், தியாகராஜன் நெறிமுறை சவால்களால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏற்றம் மற்றும் பேரழிவுகளுக்கு ஆளாகக்கூடிய ஒரு துறையில் தனித்து நிற்கிறார். சோசலிசத்தால் ஈர்க்கப்பட்ட கடன் வழங்கும் நிறுவனத்தை உருவாக்குவது என்பது தமிழ்நாட்டின் ஒரு நல்ல விவசாயக் குடும்பத்தில் வேலையாட்களால் சூழப்பட்ட ஒரு நபருக்கு எதிர்பாராத தொழில் தேர்வாகத் தோன்றலாம். ஆனால் தியாகராஜன் எப்போதும் பகுப்பாய்வு மற்றும் சமத்துவம் சார்ந்த மனம் கொண்டவர் என்று கூறினார்.

கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் மூன்றாண்டுகள் தங்குவதற்கு முன் சென்னையில் இளங்கலை மற்றும் முதுகலை மட்டத்தில் கணிதம் படித்தார். 1961 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார், 20 ஆண்டுகள் அவர் அங்கு பணியாற்றினார். பின்னர் தனது 37 வது வயதில், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஸ்ரீராம் சிட்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார்.

வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் பெரும்பாலும் சிட் ஃபண்டுகள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களையே நம்பியிருக்கிறார்கள். இது ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்யும் கூட்டு சேமிப்பு திட்டமாகும். அனைவருக்கும் பங்கு கிடைக்கும் வரை, ஒரு மாதத்திற்கு ஒரு முதலீட்டாளருக்கு வழங்கப்படுகிறது. விவசாய உபகரணங்கள், பள்ளி கட்டணம் அல்லது பெரிய கொள்முதல் ஆகியவற்றிற்கு பணம் பயன்படுத்தப்படுகிறது.

ஆண்டுகள் செல்ல செல்ல தியாகராஜன் மற்ற நிறுவனங்களை நிறுவினார், ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தை இறுதியில் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் குழுவாக மாற்றினார். வாகன நிதியுதவியில், மக்கள் 80% வரை கட்டணத்தை செலுத்துவதை தியாகராஜன் கண்டார்.

"வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதால், கடன் வாங்குவது மிகவும் ஆபத்தானது என்று மக்கள் நினைக்கிறார்கள். இது ஆபத்தானது அல்ல என்பதை நான் உணர்ந்தேன். உலகளாவிய தரநிலைகளின்படி இன்னும் மிக அதிகமாக இருக்கும் நிலையில் குறைந்த வட்டியில் கடன் வழங்க முடிவு செய்தேன். வட்டி விகிதங்கள் 30% -35% லிருந்து 17% -18% வரை சென்றது," என்று அவர் கூறினார்.

தியாகராஜன் தனது அணுகுமுறை தொண்டு பற்றியது அல்ல என்று கூறுகிறார். இது இரண்டு முக்கிய முதலாளித்துவ நம்பிக்கைகளுடன் உட்செலுத்தப்பட்டது. ஒன்று தனியார் துறை தொழில்முனைவின் முக்கியத்துவம்; மற்றொன்று, சந்தைக் கொள்கைகளில் நம்பிக்கை.” என்று தெரிவித்தார்.

ஸ்ரீராம் நிறுவனம் 98% க்கும் அதிகமான நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் வசூலிக்கிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.  இன்று, ஸ்ரீராம் குழுமம் சுமார் 23 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. முதன்மை நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், சுமார் $8.5 பில்லியன் சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சுமார் $200 மில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. 

வித்தியாசமான அணுகுமுறை

ஏழைகளுக்கு கடன் கொடுப்பது குழப்பமாக இருக்கும். அதிகப்படியான வட்டி விகிதங்கள் வழக்கமாக பாதிக்கப்படக்கூடிய கடனாளிகளை கடனில் ஆழமாக இட்டுச் செல்கின்றன. இந்தியாவில், கடன் வழங்கும் நிறூவனங்கள் சில சமயங்களில் கடுமையான கடன் வசூலை நாடுகிறார்கள்.  நாங்கள் நுண்கடன் துறையில் நுகர்வோர் பாதுகாப்பு பலவீனமாக உள்ளது. ஆனால் ஸ்ரீராம் நிறுவனம் வித்தியாசமாக என்ன செய்தது என்பதை விளக்கிய, தியாகராஜன், கடன் மதிப்பெண்களைப் (credit scores) பார்ப்பதில்லை, ஏனெனில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முறையான நிதி அமைப்பின் பகுதியாக இல்லை. மாறாக, ஊழியர்கள் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களின் குறிப்புகளை நம்பியிருக்கிறார்கள்.”  என்று தெரிவித்தார்.

தியாகராஜனின் சொந்த விருப்பம் மக்கள் மத்தியில் வாழ வேண்டும் என்பது தான். தான் பல ஆண்டுகளாக, அவர் ஹூண்டாய் ஹேட்ச்பேக் காரை ஓட்டியதாக தெரிவித்தார். அவரிடம் மொபைல் போன் இல்லை, அதை அவர் கவனச்சிதறல் என்று கருதுகிறார்.

ஸ்ரீராம் நிறுவனங்களில் உள்ள தனது பங்குகள் அனைத்தையும் ஊழியர்களின் குழுவிற்கு கொடுத்து, 2006 இல் நிறுவப்பட்ட ஸ்ரீராம் உரிமையாளர் அறக்கட்டளைக்கு மாற்றினார். நிரந்தர அறக்கட்டளையில் 44 குழு நிர்வாகிகள் பயனாளிகளாக உள்ளனர். நிர்வாகிகள் ஓய்வு பெறும்போது லட்சக்கணக்கான டாலர்களை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். அறக்கட்டளையின் மொத்த மதிப்பு $750 மில்லியனைத் தாண்டியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

தனது நேர்காணலில், தனக்கு அப்போது அல்லது இப்போது பணம் தேவையில்லை என்று தியாகராஜன் கூறினார் - தற்போது கிளாசிக்கல் இசையைக் கேட்பதற்கும் மேற்கத்திய வணிக இதழ்களைப் படிப்பதற்கும் தனது நேரத்தை மணிநேரங்களை செலவிடுகிறார்.

மேலும் பேசிய அவர் "எனக்கு ஒரு ஆலோசகரின் ஆளுமை உள்ளது. என்னால் விஷயங்களைச் சற்று வித்தியாசமாகப் பார்க்க முடிகிறது. மக்கள் எனது உணர்வை ஏற்காமல், அவர்களின் உணர்வின் அடிப்படையில் விஷயங்களைச் செய்வதில் நான் நன்றாக இருக்கிறேன். மக்கள் எனது உணர்வை ஏற்காமல், அவர்களின் உணர்வின் அடிப்படையில் விஷயங்களைச் செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும். ஆனால் நான் சொல்வது சரி, அவர்கள் நினைத்தது தவறு என்று தெரியவரும். அது தான், அது பெரும்பாலும் நிகழ்கிறது, பின்னர் நான் அவர்களுடன் தொடர்புகொண்டு நான் உங்களிடம் சொன்னேன் என்று சொல்ல முடியும்." என்று தெரிவித்தார்.

ரூ.6500 கோடி சொத்து! சொந்தமாக நிறுவனம் தொடங்காமலே கோடீஸ்வரராக மாறிய நபர்..

click me!