Nissan Magnite : 13 புது நாடுகளுக்கு ஏற்றுமதி, முன்பதிவில் புது மைல்கல் - அசத்தும் நிசான் கார்

By Kevin KaarkiFirst Published Jan 28, 2022, 4:34 PM IST
Highlights

நிசான் நிறுவனத்தின் மேக்னைட் சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் 13 புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நிசான் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் மாடலை 13 புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திறது. தற்போது நிசான் மேக்னைட் மாடல் 15 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி வளர்ந்து வரும் பல்வேறு நாடுகளிலும் புதிய நிசான் மேக்னைட் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. அறிமுகமான முதல் ஆண்டு விற்பனையில் மேக்னைட் மாடல் கணிசமான யூனிட்களை பதிவு செய்து இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் புதிய மேக்னைட் மாடலை வாங்க இதுவரை 78 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். நிசான் நிறுவனம் மேக்னைட் சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் 2020 டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. நிசான் நிறுவனத்தின் 'நெக்ஸ்ட்' மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அறிமுகமான முதல் சர்வேதச மாடல் மேக்னடை் ஆகும். 

"மேக்னைட் மாடல் தலைசிறந்த கார் ஆகும். இது நிசான் நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறன்களை அற்புதமாக எடுத்துரைக்கும் மாடலாக அமைந்துள்ளது. இது இந்திய உற்பத்தி திறனை பரைசாற்றும் விதமாக சந்தையில் கணிசமான பங்குகளை பெறவும் வழி செய்கிறது. மேக்னைட் மாடலை மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களும் அனுபவிக்க இருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது," என நிசான் நிறுவனத்தின் தலைவர் குலைம் கார்டியர் தெரிவித்தார். 

நிசான் நிறுவனத்தின் மேக்னைட் மாடல் தமிழ் நாட்டில் உள்ள ரெனால்ட்-நிசான் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஆலையில் இருந்து  மேக்னைட் மாடல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. முதற்கட்டமாக தென் ஆப்ரிக்கா மற்றும்  இந்தோனேசியா சந்தைகளில் ஏற்றுமதி செய்யப்பட்ட மேக்னைட் மாடல் அதன்பின் நேபால், பூட்டான், வங்க தேசம், இலங்கை, புருனெய், உகாண்டா, கென்யா, செய்செலிஸ், மொசாம்பிக், சாம்பியா, மரீஷியஸ், டான்சானியா மற்றும் மாலாவி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

click me!