BMW 8 series : அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமான பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ்

By Kevin KaarkiFirst Published Jan 28, 2022, 3:21 PM IST
Highlights

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய 8 சீரிஸ் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 8 சீரிஸ் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. 2022 கூப் மாடல் இதுவரை இல்லாத அளவு சிறப்பான தோற்றத்தை பெற்று இருக்கிறது. புதிய 8 சீரிஸ் மாடலில் 20 இன்ச் அலாய் வீல்கள், எட்டு வித நிறங்கள் (நான்கு மெட்டாலிக், பல்வேறு மேட் ஃபினிஷ்) கிடைக்கிறது. இதன் முன்புற பம்ப்பரில் புதிய ஸ்ப்லிட்டர் மற்றும் இலுமினேட் செய்யப்பட்ட கிட்னி கிரில் வழங்கப்பட்டு உள்ளது.

காரின் உள்புறம் 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் 10.25 இன்ச் சிஸ்டம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் புதிதாக கார்பன் ஃபைபர்-ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்போர்ட் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பார்க்க மிக அழகாக காட்சியளிக்கின்றன. 

புதிய பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் மாடலில் 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின், டுவின் டர்போ வி8 ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் பிரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடல் 340 பி.எஸ். பவர் வழங்கும் 3 லிட்டர் டர்போ பெட்ரோல், 600 பி.எஸ். பவர் வழங்கும் 4.4 லிட்டர் டுவின் டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

முன்பை போன்றே ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 8 சீரிஸ் மாடலும் 2 மற்றும் 4 கதவுகள் கொண்ட கூப் மற்றும் கன்வெர்டிபில் மாடல்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஸ்டாண்டர்டு மாடல் 4 கதவுகள் கொண்ட கூப் வேரியண்ட் ஆகும். புதிய பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் மாடல் போர்ஷ் பனமெரா, மெர்சிடிஸ் AMG-GT 4 மற்றும் ஆடி RS7 ஸ்போர்ட்பேக் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

click me!