8வது முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

By SG Balan  |  First Published Jan 16, 2025, 6:16 PM IST

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது எட்டாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் தொடர்ந்து எட்டு பட்ஜெட்களை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெறுவார்.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார். இதன் மூலம் தொடர்ந்து 8 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.

ஏற்கெனவே, தொடர்ந்து ஆறு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த மொரார்ஜி தேசாயின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். ஆனால், மொத்தம் பத்து பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்துள்ள மொரார்ஜி தேசாய் அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற சாதனையை தக்கவைத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

குறிப்பாக, மத்திய பட்ஜெட் 2025 குறிப்பிடத்தக்கது. இது பாஜக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது முழு பட்ஜெட். இந்த விஷயத்தில் சீதாராமனின் தலைமை இந்தியாவின் பொருளாதாரப் பாதையை வடிவமைப்பதில் அவரது முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பதவியேற்றதில் இருந்து நிதி நிர்வாகம் மற்றும் கொள்கைத் திட்டமிடலில் அவரது பங்களிப்பு இருந்துவருகிறது. இந்த பட்ஜெட்டுக்கான தயாரிப்பாக அவரது தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

கடைசி நிமிடத்தில் வருமான வரியை சேமிப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்!

முந்த்ரா ஊழலைத் தொடர்ந்து டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்ததன் காரணமாக 1958 இல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பட்ஜெட் தாக்கல் செய்தார். இதேபோல், அசாதாரண அரசியல் சூழ்நிலைகள் காரணமாக முந்தைய பிரதமர்கள் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் பட்ஜெட் தாக்கல் செய்தனர்.

மத்திய பட்ஜெட் 2025 பற்றிய எதிர்பார்ப்புகள் இருந்தாலும், மத்திய அரசு இன்னும் பட்ஜெட் தாக்கல் தேதி மற்றும் நேரத்தை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் பிப்ரவரி 1, 2025 அன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அவரது பதவிக் காலம் இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தை பிரதிபலிக்கிறது. இதனால், வரவிருக்கும் பட்ஜெட் ம்பல எதிர்பார்ப்புகளையும் கொண்டுள்ளது.

EPFO 3.0: 7 கோடி PF உறுப்பினர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் என்னென்ன?

click me!