மீண்டும் விவசாயத்திற்கு திரும்பிய பாஜக..!! நாட்டின் உண்மையான வளர்ச்சி இதில்தான் என்ற உண்மை தெரிந்தது...??

By Ezhilarasan BabuFirst Published Feb 1, 2020, 12:14 PM IST
Highlights

பூமி திருத்தி உண் என்ற மூன்று வார்த்தையில் விவசாயத்தின் மகத்துவத்தை ஒளவையார் கூறியுள்ளார் என்றார் அவர்.  விளை பொருட்களை கொண்டு செய்வதற்காக தனி விமானம் இயக்கப்படும் ,  வேளாண்  சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்,  எனவும் கூறியுள்ளார்..

கிசான் ரயில் என்ற விவசாய ரயில்களின் மூலம் பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல வசதி செய்யப்படும் எனவும் அது நுகர்வோர்களை விரைந்து சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் . மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை வாசிக்க தொடங்கினார். மக்களின் வருமானத்தை உயர்த்தி வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் பட்ஜெட்டாக அமையும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

 

சாதாரண மக்களின் வருமானத்தை உயர்த்தும் பட்ஜெட் இது என்றார் தொடர்ந்து பேசிய அவர், நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்ற அவர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது  எனவும் கூறியுள்ளார்.  கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பை உறுதி செய்ய பட்ஜெட்டில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக்க தொடர்ந்து மத்திய அரசு பணியாற்றும் என்ற அவர்  பூமி திருத்தி உண்” ஒளவையார் எழுதிய ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டினார்.  பூமி திருத்தி உண் என்ற மூன்று வார்த்தையில் விவசாயத்தின் மகத்துவத்தை ஒளவையார் கூறியுள்ளார் என்றார் அவர்.  விளை பொருட்களை கொண்டு செய்வதற்காக தனி விமானம் இயக்கப்படும் ,  வேளாண்  சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்,  எனவும் கூறியுள்ளார். 

கிசான் ரயில் மூலம் பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல வசதி செய்யப்படும்.  விரைவில் அளிக்கக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றடைய கிருஷி உடான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும் என்றார் முன்னதாக 20 லட்சம் விவசாயிகளுக்கு சேலார் பம்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.  சூரிய ஒளி மூலம்  மின்சாரம் தயாரிக்க இயந்திரங்கள் வழங்கப் படும் எனவும் அதற்கு மானியம் அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் விவசாயத்துறைக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

click me!