விமானத்தில் பறக்கும் காய்கறிகள்... மத்திய பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 1, 2020, 11:59 AM IST
Highlights

விரைவில் அழுகக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றையும் விஹமாக கிருஷி உடான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கான அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. அதன்படி 2025ம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இருமடங்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  2021க்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு பால் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விரைவில் அழுகக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றையும் விஹமாக கிருஷி உடான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  

பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி குளிர்பதன ரயில்கள் இயக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேபோல் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
 

click me!