முகேஷ் அம்பானியின் சகோதரி யார், அவர் என்ன செய்கிறார் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பம் அம்பானி குடும்பம் என்று அனைவருக்கும் தெரியும். தங்கள் ஆடம்பர வாழ்க்கை முறைகள் மற்றும் பிரம்மாண்ட சொத்துக்களுக்காக அம்பானி குடும்பத்தினர் அவ்வப்போது செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் ஆக்கிரமித்து வருகின்றன. அம்பானி மனைவி நீதா அம்பானி, அவர்களின் பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி பற்றியும் அவ்வப்போது செய்திகள் வலம் வருகின்றன.
ஆனால் அம்பானி குடும்பத்தில் இன்னும் சில உறுப்பினர்கள் ஊடக வெளிச்சத்தை விட்டு விலகி தனிப்பட்ட வாழ்க்கையை நடத்துகிறார்கள். அதில் முகேஷ் அம்பானியின் சகோதரி நீனா கோத்தாரியும் ஒருவர். நீனா கோத்தாரி ஒரு தொழிலதிபராகவும், தனது சகோதரனைப் போலவே பெரும் செல்வத்தை கொண்டவராகவும் இருக்கிறார்..
கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்டின் தலைவராக இருக்கும் நீனா தனது சொந்த சாம்ராஜ்யத்தை அமைதியாக உருவாக்கி, கார்ப்பரேட் உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். மதிப்பிற்குரிய அம்பானி குடும்பத்தில் பிறந்த நீனா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானியின் மகள் ஆவார். 2003 ஆம் ஆண்டு ஜாவக்ரீன் என்ற காபி மற்றும் உணவு பிசினஸை தொடங்கினார். ஜாவக்ரீன் மற்ற பெரிய காபி கடைகளை போல பிரபலமாக இல்லை என்றாலும், அது நீனாவின் தொழில் முனைவோர் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியது.
இருப்பினும், நீனாவின் வாழ்க்கையில் சோகம் ஏற்பட்டது, அவரது கணவரும், தொழிலதிபருமான பத்ராஷ்யம் கோத்தாரி புற்றுநோயால் 2015 இல் இறந்தார். இதனால் தனது இரண்டு குழந்தைகளான அர்ஜுன் மற்றும் நயன்தாராவை வளர்க்கும் பொறுப்பு நீனாவுக்கு வந்தது. இருந்தபோதிலும், பல சவால்களை எதிர்கொண்ட பிறகும் தனது குடும்ப தொழிலான கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஏப்ரல் 8, 2015 அன்று நீனா கோத்தாரியின் தலைவராக நியமிக்கப்பட்டார். தளராத உறுதியுடனும் பொறுமையுடனும் நிறுவனத்தை வெற்றியை நோக்கி வழிநடத்திய நீனா , HC கோத்தாரி குழுமத்தின் முதன்மை நிறுவனமாக அதன் நிலையை உறுதிப்படுத்தினார். தற்போது, சென்னையில் உள்ள கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட், நீனாவின் அசைக்க முடியாத உணர்வை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது..
இப்ப கோடிக்கணக்கில் வருமானம்.. ஆனா நீதா அம்பானி வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தலைவி என்ற பொறுப்பை தவிர, கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் கோத்தாரி சேஃப் டெபாசிட்ஸ் லிமிடெட் உட்பட HC கோத்தாரி குழுமத்தின் கீழ் மற்ற வணிக முயற்சிகளையும் நீனா நிர்வகிக்கிறார். நீனாவின் மூத்த மகன் அர்ஜுன் கோத்தாரி, கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகிறார், தனது தாயாருடன் சேர்ந்து குடும்பத் தொழிலை விரிவுபடுத்துகிறார்.
நீனாவின் மகள் நயன்தாரா, ஷியாம் மற்றும் ஷோபனா பார்டியாவின் மகனும், கேகே பிர்லாவின் பேரனுமான ஷமித் பார்டியாவை மணந்தார். தனது சகோதரரைப் போலவே, நீனாவும் மிகப்பெரிய சொத்து மதிப்பை வைத்திருக்கிறார். நீனா 52.4 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.கோத்தாரி சுகர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட் சர்க்கரை துறையில் முன்னணியில் உள்ளது அந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 435 கோடி ஆகும்.