ரிலீஸ் தேதியுடன் டீசர் - விரைவில் புது கிளான்சா வெளியீடு - டொயோட்டா அதிரடி

Nandhini Subramanian   | Asianet News
Published : Mar 04, 2022, 12:40 PM IST
ரிலீஸ் தேதியுடன் டீசர் - விரைவில் புது கிளான்சா வெளியீடு - டொயோட்டா அதிரடி

சுருக்கம்

டொயோட்டா நிறுவனத்தின் புதிய கிளான்சா மாடல் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் புதிய கிளான்சா மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. மேலும் மேம்பட்ட புதிய கிளான்சா மாடல் இந்திய சந்தையில் மார்ச் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்து இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக கிளான்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் புதிய பலேனோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய கிளான்சா மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மாருதி  சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இரு மாருதி கார்களை ரி-பிராண்டு செய்து டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் இரு நிறுவனங்கள் கூட்டணியில் வெளியான முதல் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக டொயோட்டா கிளான்சா அறிமுகம் செய்யப்பட்டது. இது மாருதி பலேனோ மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். 

இதைத் தொடர்ந்து அர்பன் குரூயிசர் மாடலை டொயோட்டா அறிமுகம் செய்தது. இந்த மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய கிளான்சா மாடலை பொருத்தவரை இந்த கார் பலேனோவில் உள்ளதை போன்ற என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறும். அந்த வகையில் புதிய டொயோட்டா கிளான்சா மாடலில் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்படும்.

இந்த என்ஜின் 88 பி.ஹெச்.பி.திறன் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் புதிய பலேனோ போன்றே காட்சியளிக்கும். எனினும், இதில் டொயோட்டா கிளான்சா பேட்ஜ் இடம்பெற்று இருக்கும். 

புதிய மேம்பட்ட டொயோட்டா கிளான்சா மாடலின் வேரியண்ட்கள், அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து விரைவில் இந்த மாடலின் விற்பனை நடைபெறும் என தெரிகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Business Training: நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! அரசின் சூப்பர் அறிவிப்பு!
SIP Investment: மாசம் ₹2,000 முதலீடு... 4 வருஷத்துல லட்சாதிபதி ஆகலாம்! கணக்கு இதுதான்!