புதிய பலேனோ ரிலீஸ் - சூப்பர் தகவல் வெளியிட்ட மாருதி சுசுகி

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 18, 2022, 01:36 PM IST
புதிய பலேனோ ரிலீஸ் - சூப்பர் தகவல் வெளியிட்ட மாருதி சுசுகி

சுருக்கம்

மாருதி சுசுகி நிறுவனம்  புதிய பலேனோ மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனம் புதிய பலேனோ மாடலை இந்தியாவில் பிப்ரவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 மாருதி சுசுகி பலேனோ மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிக மாற்றங்களை பெற்று இருக்கிறது. காரின் வெளிப்புறம், உள்புறம் மட்டுமின்றி இந்த கார் இம்முறை புதிய டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் அறிமுகமாக இருக்கிறது. 

2022 பலேனோ மாடலில் அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் உள்ள கேட்ஜட் ஆப்ஷன்கள் மேம்படுத்தப்பட்டு, கச்சிதமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. புதிய பலேனோ மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் புதிதாக 9 இன்ச் ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ARKAMAYS டியூனிங் கொண்ட புதிய சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இத்துடன் 360 டிகிரி கேமரா சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, இன் பில்ட் நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. கேபினில் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே யூனிட் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புதிய மாருதி சுசுகி பலேனோ மாடலில் 1.2 லிட்டர் VVT மோட்டார், 12. லிட்டர் டூயல்ஜெட், டூயல் VVT என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் CVT யூனிட், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் டர்போ பெட்ரோல் யூனிட் உடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Rupee Value: இந்திய ரூபாய் மதிப்பு சரிய காரணம் இதுதான்.! இதனால் இவ்ளோ பாதிப்பா?!
Business: மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பாதிப்பது இவ்ளோ ஈசியா?! தித்திக்கும் வருமானம் தரும் தேனீ வளர்ப்பு.!