Royal Enfield scram 411 : மார்ச் வெளியீடு - ஸ்கிராம் 411 பற்றி புது அப்டேட் கொடுத்த ராயல் என்ஃபீல்டு

By Kevin KaarkiFirst Published Feb 18, 2022, 12:34 PM IST
Highlights

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீடு பற்றிய அப்டேட் கொடுத்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்கிராம் 411 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், புதிய மாடலின் ஹார்டுவேர் மற்றும் ஸ்டைலிங் சற்றே வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலின் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய ஸ்கிராம் 411 மாடலில் ஹெட்லைட்டை சுற்றி அலுமினியம் கவுல் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹிமாலயன் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் லக்கேஜ் ரேக் ஸ்கிராம் 411 மாடலில் வழங்கப்படவில்லை. இவை இரண்டும் ஸ்கிராம் 411 மற்றும் ஹிமாலயன் இடையே வித்தியாசப்படுத்தும் அம்சங்களாக இருக்கின்றன. 

இத்துடன் ஹிமாலயன் மாடலில் உள்ள ட்ரிப்பர் நேவிகேஷன் பாட் ஸ்கிராம் 411 மாடலில் வழங்கப்படுகிறது. எனினும், முன்புறம் உள்ள பெரிய விண்ட்ஸ்கிரீன் ஸ்கிராம் 411 மாடலில் காணப்படவில்லை. இதே விவரங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த ஸ்பை படங்களிலும் இடம்பெற்று இருந்தது. இத்துடன் ஸ்கிராம் மாடலில் சற்றே சிறிய முன்புற சக்கரம் வழங்கப்படுகிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200mm ஆக இருக்கிறது.

ஸ்கிராம் 411 மாடலிலும் 411சசி, ஏர்/ஆயில் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 24.3 பி.ஹெச்.பி. திறன், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 மாடல் யெஸ்டி ஸ்கிராம்ப்ளர், ஹோண்டா CB350RS மற்றும் ஹஸ்க்வர்னா ஸ்வாட்பிலைன் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

இந்திய சந்தையில் புதிய ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 விலை ஹிமாலயன் மாடலை விட சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். விரைவில் புதிய ஸ்கிராம் 411 வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.

click me!