
லெக்சஸ் நிறுவனம் புதிய NX 350h மாடல் இந்திய விலையை மார்ச் 9 ஆம் தேதி அறிவிக்கிறது. புதிய ஆடம்பர எஸ்.யு.வி. மாடஸ் ஒற்றை பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷனில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் - எக்ஸ்குசிட், லக்சரி மற்றும் எஃப் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. புதிய லெக்சஸ் NX 350h மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், புதிய லெக்சஸ் NX 350h மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் லெக்சஸ் நிறுவனத்தின் ஸ்பிண்டில் கிரில், புதிய பம்ப்பர்கள், நீண்ட ஹூட் மற்றும் முற்றிலும் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளன. உள்புறம் 9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய லெக்சஸ் NX 350h மாடலில் 360 டிகிரி பார்கிங் கேமரா, ஆட்டோ ஹெட்லேம்ப்கள் மற்றும் வைப்பர்கள், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் மொபைல் சார்ஜிங், முன்புறம் எலெக்ட்ரிக் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் இந்திய மாடலில் எந்தெந்த அம்சங்கள் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
புதிய லெக்சஸ் NX 350h மாடலில் 2.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த பெட்ரோல் என்ஜினுடன் இ மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த எஸ்.யு.வி. மாடல் 244 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்டெப் e-CVT கியர்பாக்ஸ் உள்ளது.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய லெக்சஸ் NX 350h மாடல் ஆடி Q5, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பி.எம்.டபிள்.யூ. X3, மெர்சிடிஸ் பென்ஸ் GLC மற்றும் வால்வோ XC60 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.