முதியோர், ஓய்வூதியம் வாங்குவோர் இதை இணைக்க மறக்காதிங்க: கடைசி தேதி தெரியுமா?

Published : Mar 03, 2022, 03:10 PM IST
முதியோர், ஓய்வூதியம் வாங்குவோர் இதை இணைக்க மறக்காதிங்க: கடைசி தேதி தெரியுமா?

சுருக்கம்

முதியோர், ஓய்வூதியம் பெறுவோர் அஞ்சலகங்களில் மாத வருவாய் திட்டம்(எம்ஐஎஸ்) மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம்(எஸ்சிஎஸ்எஸ்) ஆகியவற்றில் முதலீடு செய்து மாதவட்டி பெறுவோர் தங்கள் வங்கிக்கணக்கு அல்லது தபாலநிலைய சிறுசேமிப்பு கணக்குடன் திட்டங்களை இணைக்க வேண்டும்.

முதியோர், ஓய்வூதியம் பெறுவோர் அஞ்சலகங்களில் மாத வருவாய் திட்டம்(எம்ஐஎஸ்) மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம்(எஸ்சிஎஸ்எஸ்) ஆகியவற்றில் முதலீடு செய்து மாதவட்டி பெறுவோர் தங்கள் வங்கிக்கணக்கு அல்லது தபாலநிலைய சிறுசேமிப்பு கணக்குடன் திட்டங்களை இணைக்க வேண்டும்.

இந்த பெரும்பலான முதியோர் தங்களின் எம்ஐஎஸ், எஸ்சிஎஸ்எஸ், டிசி கணக்குகளை தங்களின் தபால் சேமிப்பு கணக்குஅல்லது வங்கிக்கணக்குடன் இணைக்கவில்லை. இதை இணைப்பதற்கு 2022, மார்ச்31ம் தேதி கடைசி தேதியாகும். ஏப்ரல்1-ம் தேதி முதல் இந்த திட்டங்களில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகை அனைத்தும், சேமிப்பு கணக்கில் மட்டும்தான் சேர்க்கப்படும் என்று மத்திய அஞ்சல்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால், தங்களின் சேமிப்புக் கணக்குடன் மாத வட்டி பெறும் திட்டங்களை இணைக்காமல் இருந்தால், அந்த வட்டி கணக்கில் சேர்க்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அஞ்சல்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  “எம்ஐஎஸ், எஸ்சிஎஸ்எஸ், டிசி கணக்குகள் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை 2022, ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்குதாரர்களின் வங்கிக்கணக்கு அல்லது தபால் சேமிப்பு கணக்கில் மட்டும்தான் டெபாசிட் செய்யப்படும்.

ஒருவேளை மார்ச்31ம் தேதிக்குள் எம்ஐஎஸ், எஸ்சிஎஸ்எஸ், டிசி கணக்குகளுடன் சேமிப்பு கணக்கை இணைக்காமல் இருந்தால், ஏப்ரல் 1ம் தேதி முதல் வட்டித் தொகை, இதர செலவுகள் கணக்கில் சேர்க்கப்படும். வட்டித்தொகையை எடுக்க முயன்றாலும் அது ரொக்கமாக வழங்காமல் காசோலையாகத்தான் கிடைக்கும்” எனத் தெரிவி்த்துள்ளது.

வங்கிக்கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கில் வட்டித்தொகை சேர்க்கப்படுவதன் மூலம் பல நன்மைகள் முதியோருக்கு கிடைக்கும். அதாவது வட்டித் தொகை சேமிப்புக்கணக்கில் சேர்க்கப்படுவதன் மூலம் அந்த வட்டித்தொகைக்கு வட்டி கிடைக்கும்.

முதலீட்டாளர்கள் அல்லது முதியோர்கள் வட்டித்தொகையைப் பெற தபால்நிலையத்துக்கு செல்லத் தேவையில்லை. அவர்கள் ஆன்லைன், மொபைல் கணக்கின் மூலம் பணத்தை எடுக்கமுடியும்.

வட்டித் தொகையை எடுப்பதற்காக எம்ஐஎஸ், எஸ்சிஎஸ்எஸ், டிசி ஆகிய ஒவ்வொரு கணக்கிற்கும் ஒவ்வொருவிதமான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யத் தேவையில்லை.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!