
மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் மாமடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2022 மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் மாடல் விலை ரூ. 2.50 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். லக்சரி லிமோசின் மாடல் S580 மற்றும் S680 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் S580 மாடல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. 2022 மெர்சிடிஸ் மேபேக் S680 மாடல் CBU முறையில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் மெர்சிடிஸ் மேபேக் S680 மாடல் விலை ரூ. 3.20 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். அந்த வகையில் இந்திய சந்தையில் விற்பனையாகும் மேபேக் மாடல்களில் விலை உயர்ந்த ஒன்றாக புதிய மேபேக் S680 அமைந்துள்ளது. முந்தைய மாடலை போன்றே புதிய மேபேக் மாடலும் V223 எஸ் கிளாஸ் லக்சரி செடான் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல்பேஸ் 180mm வரை நீட்டிக்கப்பட்டு அதிக இடவசதி கொண்ட கேபின் வழங்கப்பட்டு உள்ளது.
வீல்பேஸ் நீட்டிக்கப்பட்டுள்ளதால், புதிய காரின் கதவுகள் அளவில் பெரியதாகி இருக்கின்றன. இத்துடன் பிரத்யேத அலாய் வீல்கள், டெயில்கேட் மற்றும் சி பில்லர்களில் மேபேக் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. 2022 மெர்சிடிஸ் மேபேக் S680 மாடல் டூயல் டோன் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த மாடலில் அடாவ்டிவ் ஏர் சஸ்பென்ஷன், தனித்தனி கிளைமேட் சோன்கள், பவர்டு இருக்கைகள், ஹீடெட் மற்றும் வெண்டிலேடெட் சீட்கள், சீட் மசாஜ் அம்சம், பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் மமாடல் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் மேபேக் S580 மாடலில் 4 லிட்டர் வி8 என்ஜினும், S680 மாடலில் 6 லிட்டர் வி12 என்ஜினும் வழங்கப்பட்டு இருக்கிறது. S580 மாடலில் உள்ள என்ஜின் 503 ஹெச்.பி. திறன், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் 20 ஹெச்.பி. மற்றும் 200 நியூட்டன் மீட்டர் அதிக செயல்திறன் வெளிப்படுத்துகிறது.
மெர்சிடிஸ் மேபேக் S680 மாடலில் 612 ஹெச்.பி. திறன், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு என்ஜின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.