இதை தெரிஞ்சுக்குங்க..! ஆப்பிள், டெஸ்லா, அமேசான் பங்குகளை இனி இந்தியாவிலேயே வாங்கலாம் விற்கலாம்: எப்படி?

Published : Mar 03, 2022, 01:51 PM ISTUpdated : Mar 03, 2022, 01:53 PM IST
இதை தெரிஞ்சுக்குங்க..! ஆப்பிள், டெஸ்லா, அமேசான் பங்குகளை இனி இந்தியாவிலேயே வாங்கலாம் விற்கலாம்: எப்படி?

சுருக்கம்

அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களான டெஸ்லா, ஆப்பிள், அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகிய 4 நிறுவனங்களின் பங்குகளை இந்தியாவில் விற்பனை செய்யலாம், இந்திய சில்லரை முதலீட்டாளர்கள்வாங்கவும் முடியும்.

அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களான டெஸ்லா, ஆப்பிள், அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகிய 4 நிறுவனங்களின் பங்குகளை இந்தியாவில் விற்பனை செய்யலாம், இந்திய சில்லரை முதலீட்டாளர்கள்வாங்கவும் முடியும்.

என்எஸ்இ எனப்படும் தேசியப் பங்குச்சந்தையின் சர்வதேச வர்தத்கம்(ஐபிஎஸ்இ) பிரிவுதான் இந்த வர்த்தக வசதியை இன்று முதல் வழங்குகிறது. முதல் கட்டமாக 4 பங்குகளும் படிப்படியாக 50 நிறுவனங்களின் பங்குகளும் பட்டியலிட திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க பங்குகளை வாங்குதல், கிளியரிங், செட்டில்மெண்ட் அனைத்தையும் என்எஸ்இ அமைப்பின் சர்வதேச வர்த்தகப்பிரிவு செய்கிறது.
எத்தனை பங்குகள் விற்பனை

முதல்கட்டமாக 8 நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு வர உள்ளன. அதில் டெஸ்லா, ஆப்பிள், நெட்பிளிக்ஸ், அமேசான், அல்ஃபாபெட், மைக்ரோசாஃப்ட், மெட்டா, வால்மார்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வந்துள்ளன. விரைவில் 50 நிறுவனங்களாக பங்குகள் உயர்த்தப்படும்.

இந்தியாவில் அமெரிக்க பங்குகள் பட்டியலிடப்படுமா

இல்லை. இந்தியாவில் அமெரிக்கப் பங்குகள் பட்டியலிடப்படாது. அதற்குப்பதிலாக, எஎஸ்இ தன்னுடைய ஐஎப்எஸ்சி மூலம் வர்த்தகம் செய்ய குறைந்த செலவில் உதவும். இனிமல் அமெரிக்க தரகுநிறுவனங்கள் மூலம் பங்குகளை வாங்கத் தேவையில்லை.

அமெரிக்க பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்யலாம்

அமெரிக்க பங்குகளில் இந்திய சில்லரை முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவுவரை முதலீடு செய்யலாம். அதாவது, 2.50 லட்சம் டாலர்கள் அல்லது, ரூ.1.90 கோடிவரை முதலீடு செய்யலாம்.

அமெரிக்கபங்குகளில் வர்த்தகம் செய்யும் நேரம் என்ன

இ்ந்திய முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் அமெரிக்கபங்குகளை வாங்கவோ விற்கவோ என்எஸ்இ ஐஎப்எஸ்சியின் கிப்டி சிட்டி(Gujarat International Finance Tech (GIFT) City.)  மூலம்தான் முடியும். வர்த்தகம் நேரம், இரவு 8மணியிலிருந்து அதிகாலை 2.30 மணிவரை.

 வரி விதிப்பு உண்டா

அமெரிக்கப் பங்குகளை 2 ஆண்டுகளஉக்கு குறைவாக வைத்திருந்துமுதலீட்டு ஆதாயம் அடைந்தால், குறைந்தமுதலீட்டு ஆதாயத்தின் கீழ் வரிவிதிப்புக்குள்ளாகும். அதேசமயம், 2 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்து லாபம் ஈட்டினால், நீண்டகால முதலீட்டு ஆதாயம் அடிப்படையில் 20 சதவீதம் வரிவிதிப்புக்குள்ளாகும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்