Skoda Slavia: சக்திவாய்ந்த ஸ்லேவியா வேரியண்ட் இந்திய விலை அறிவித்த ஸ்கோடா

Published : Mar 03, 2022, 12:23 PM ISTUpdated : Mar 03, 2022, 01:14 PM IST
Skoda Slavia: சக்திவாய்ந்த ஸ்லேவியா வேரியண்ட் இந்திய விலை அறிவித்த ஸ்கோடா

சுருக்கம்

Skoda Slavia: ஸ்கோடா ஸ்லேவியா 1.5 லிட்டர் என்ஜின் வேரியண்ட் இந்திய விலையை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து  இருக்கிறது.

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஸ்லேவியா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்கோடா ஸ்லேவியா 1.0 TSI மாடல் விலை கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதன் விலை ரூ. 10.69 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், புதிய ஸ்லேவியா மாடல் 1.5 லிட்டர் என்ஜின் கொண்ட மாடலின் விலை தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்கோடா ஸ்லேவியா 1.5 லிட்டர் என்ஜின் மாடல் விலை ரூ. 16.19, எக்ஸ்-ஷோரூம் லட்சம் என துவங்குகிறது.

புதிய ஸ்கோடா ஸ்லேவியா 1.5 லிட்டர் என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DSG யூனிட் வழங்கப்படுகிறது. இந்த பிரிவில் அதிக சக்திவாய்ந்த மாடலாக புதிய ஸ்கோடா ஸ்லேவியா இருக்கிறது. குஷக் மாடலை போன்றே ஸ்கோடா ஸ்லேவியா மாடலில் உள்ள 1.5 லிட்டர் என்ஜினுடன் ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இது கார் அதிவேகமாக செல்லும் போது இரு சிலிண்டர்களை ஷட் டவுன் செய்து விடும். இவ்வாறு செய்யும் போது கார் மைலேஜ் கணிசமாக அதிகரிக்கும். 

இத்துடன் 10 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் நேவிகேஷன் போன்ற அம்சங்கள் உள்ளன. வேரியண்டிற்கு ஏற்ப பல்வேறு ஸ்பீக்கர்கள், டுவீட்டர்கள் மற்றும் சப்-ஊஃபர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த காரில் 8 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஸ்டீரிங் வீல் கண்ட்ரோல்கள் உள்ளன.

பாதுகாப்பிற்கு புதிய ஸ்லேவியா மாடலில் ஆறு ஏர்பேக், ESC, எலெக்டிரானிக் டிஃபரென்ஷியல் சிஸ்டம் (EDS), ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Raksha Bandhan 2026: ரக்‌ஷா பந்தன் நாளில் சந்திர கிரகணம்.. ராக்கி கட்டலாமா? கூடாதா? முழு விபரம்
ITR Refund 2026: மொபைல், பார்ட்டினு வீணாக்காதீங்க! ரீஃபண்ட் பணத்தை வைச்சு லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!