ரியல் எஸ்டேட் துறைக்கு வெச்சாச்சு ஆப்பு ....”நடைமுறைக்கு வருகிறது அதிரடி சட்டம்”

 
Published : Oct 14, 2016, 07:27 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ரியல் எஸ்டேட் துறைக்கு வெச்சாச்சு ஆப்பு ....”நடைமுறைக்கு வருகிறது அதிரடி சட்டம்”

சுருக்கம்

 

நீண்டநாள் இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்தில், ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா கொண்டுவரப்பட்டது.இதனை தொடர்ந்து, ரியல் எஸ்டேட்டை கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைமுறை  படுத்த  உள்ளது.

இந்த  ஆணையத்தின் படி, 800 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், வர்த்தக கட்டிடங்கள் என அனைத்தும் இதில்  பதிவு செய்யப்படும்.

இதன் முக்கிய அம்சம் :

கட்டுமான நிறுவனங்கள் , வாடிக்கையாளர் அளித்த பணத்தில் 70 சதவீத தொகையை வங்கியில் தனி கணக்கு தொடங்கி பராமரிக்க வேண்டும்.

இந்த பிரத்யேக வங்கி கணக்கில் டெபாசிட் செய்த பணத்தை கட்டுமான செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது வெளிப்படை தன்மையையும் உறுதி செய்கிறது.

ரியல் எஸ்டேட் மசோதா, வீடு வாங்குவோருக்கு பாதுகாப்பு அளிப்பது  மட்டுமல்லாமல், நம்பக தன்மை அதிகரிக்கும்  என்கிறது.

இது குறித்து, விதிமுறைகள் அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என்று  எதிர்பார்க்கபடுகிறது.மேலும்  இது  தொடர்பான  சட்டம் மிக விரைவில் அமல்படுத்தப்படும்   என்று  செய்திகள்  தெரிவிகின்றன .

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

மனைவிக்கு பணம் கொடுத்தால் பிரச்சனையா.? வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்
SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! யோனோ 2.0 செயலி அறிமுகம்!