கவிழ்ந்தது இந்திய  பங்குச்சந்தை  ...... சென்செக்ஸ்  439 புள்ளிகள் சரிவு...!!!

 
Published : Oct 14, 2016, 06:57 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
கவிழ்ந்தது இந்திய  பங்குச்சந்தை  ...... சென்செக்ஸ்  439 புள்ளிகள் சரிவு...!!!

சுருக்கம்

 

அமெரிக்க பெடரல்  வங்கி, வட்டி  விகிதத்தை  உயர்த்தபோவதாக   வெளியான  தகவலை  தொடர்ந்து, உலக அளவில் , வர்த்தகம்  பாதிக்கப்பட்டுள்ளது.

 மேலும், இதன்  எதிரொலியாக  வாரத்தின்  நான்காவது  வர்த்தக  தினமான  இன்று,  வர்த்தக  நேர  தொடக்கத்திலேயே சரிவுடன்  தொடங்கியது.

 வர்த்தக  தொடக்கத்தில் 288 புள்ளியுடன்   சரிவுடன்  தொடங்கிய சென்செக்ஸ், முடிவில், 439 புள்ளிகள்  சரிவடைந்து காணப்பட்டது.

அதன் படி,  தேசிய  பங்கு சந்தை  குறியீடு  நிப்டி 135 புள்ளிகள் குறைந்து  8,573  புள்ளியிலும், மும்பை  பங்கு சந்தை குறியீடு  சென்செக்ஸ் 439 புள்ளிகள்  குறைந்து, 27,643  புள்ளியிலும்  நிலை பெற்றது.

இன்றைய  பங்கு  வர்த்தகத்தில், பெரும்பாலான  நிறுவன  பங்குகள்  இழப்பை  சந்தித்தன .

லாபத்துடன்  முடிவுற்ற  நிறுவன  பங்குகள் :

ONGC, INFY, MAARUTHI, CIPLA HERO MOTO CORP உள்ளிட்ட  நிறுவன   பங்குகள் லாபத்துடன் முடிவுற்றன

இழப்பை  சந்தித்த  நிறுவன  பங்குகள் :

BANK OF BARODA, ADANI PORTS, IDEA   உள்ளிட்ட  நிறுவன   பங்குகள்  இழப்பை  சந்தித்தன.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

மனைவிக்கு பணம் கொடுத்தால் பிரச்சனையா.? வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்
SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! யோனோ 2.0 செயலி அறிமுகம்!