வரும் 15 ஆம் தேதி மீண்டும் பெட்ரோல் விலை உயர வாய்ப்பு......!!!

 
Published : Oct 14, 2016, 06:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
வரும் 15 ஆம் தேதி மீண்டும் பெட்ரோல் விலை உயர  வாய்ப்பு......!!!

சுருக்கம்

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு இரண்டு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை  நிர்ணயம்  செய்கிறது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு, அடிப்படையில்,  பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 37 காசு உயர்த்தப்பட்டது. ரூ.64.58 ஆகவும், சென்னையில் ரூ.64.13 ஆகவும் அதிகரித்தது. டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில், டீலர்கள் கமிஷன் அதிகரிக்கப்பட்டதை காரணம் காட்டி பெட்ரோல் விலை கடந்த 5ம் தேதியில் இருந்து மேலும் லிட்டருக்கு 14 காசுகள் உயர்த்தப்பட்டது. 

கடந்த வாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒரு பேரல் கச்சா எண்ணெயை 50.14 டாலருக்கு வாங்கியுள்ளன. பிரண்ட் கச்சா எண்ணெய் 1.75 டாலர் அல்லது 3.4 சதவீதம் உயர்ந்து 53.68 டாலராகியுள்ளது. இதன் எதிரொலியாக வரும் 15ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன  என  தகவல்  வந்துள்ளது .

இதனை  தொடர்ந்து, , இந்த வாரமும்  பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Training: வேலைக்கு போக வேண்டாம்! வீட்டிலிருந்தே ரூ.30,000 சம்பாதிக்க இலவச தையற்கலை பயிற்சி! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 16): சட்டென்று மாறிய தங்கம் விலை.! நிரம்பி வழிந்த நகை கடைகள்!