
இதுவரை அச்சிடப்பட்ட புது ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.9.20 லட்சம் கோடி ரிசர்வ் வங்கி ..!
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ள்ளது. புதியயதாக அச்சிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.9.20 லட்சம் கோடி என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதேசமயத்தில், செல்லாது நோட்டு என அறிவிக்கப்பட்டு, திரும்ப பெறப்பட்ட பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, ரூ.15.40 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து, பெறப்பட்ட பணத்தை விட , புதிதாக புழக்கத்தில் விடப்பட்ட பணத்தின் மதிப்பு குறைவு என்பது குறிபிடத்தக்கது.
இதன் மூலம், டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மக்கள் மாற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, குறைந்த அளவில் பணத்தை இதுவரை அச்சிடப்பட்டு, வெளியிட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்த விவரத்தை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், தொடர்ந்து, கருப்புப் பணப்பரிவர்த்தனையை கட்டுப்படுத்தி வரும் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.