பட்ஜெட்டை தாமதமாக தாக்கல் செய்ய விதிமுறைகள் என்ன? செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

First Published Jan 19, 2017, 9:00 PM IST
Highlights
 

கடந்த 2012-ம் ஆண்டு பட்ஜெட்டை தாமதமாக தாக்கல் செய்த போது என்ன விதமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது குறித்து தெரிவிக்க மத்திய அமைச்சரவை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி  இன்றுக்குள்  பதில் அளிக்க கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பட்ஜெட் தயாரிக்கும் விதிமுறைகள், தாக்கல் செய்யும் விதிமுறைகள் குறித்த விவரங்களையும் அளிக்கவும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு இதேபோன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் தேர்தலை காரணம் காட்டி பட்ஜெட்டை தள்ளிவைக்க கோரப்பட்டது. இதனால், பிப்ரவரி 28ந்தேதி தாக்கலாகும் பட்ஜெட் மார்ச் 16-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இதைக் காரணம் காட்டி பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருந்தபோது, இடைக்கால பட்ஜெட்டை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்துதான் தேர்தலைச் சந்தித்தது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தபின், பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன இதுகுறித்து பதில் அளிக்கக் கோரி அமைச்சரவைச் செயலாளரையும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

ஆனால், சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் கூறிய மத்தியஅரசு, பட்ஜெட் என்பது, சில மாநிலங்களுக்கு மட்டும் அளிக்கப்படுவை அல்ல, அது ஒட்டுமொத்த நாட்டுக்கானது. தேர்தல் நடைபெறும் 5 மாநில மக்களை இந்த பட்ஜெட்திசைதிருப்பும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றது. மேலும், புதிய நிதியாண்டு ஏப்ரல் 1-ந்தேதி  தொடங்குவதால், அனைத்து விதமான துறைகளுக்கும் நிதிபங்களிப்பு இருக்கும் வகையில் முன்கூட்டியை பட்ஜெட்மாற்றிஅமைக்கப்பட்டது என்றும் தெரிவித்தது.

 

click me!