வெளிவருகிறது புதிய 1000  ரூபாய் நோட்டு.....! அச்சடிக்கும் பணி மும்முரம் .....

 
Published : Feb 21, 2017, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
வெளிவருகிறது புதிய 1000  ரூபாய் நோட்டு.....! அச்சடிக்கும்  பணி    மும்முரம் .....

சுருக்கம்

வெளிவருகிறது புதிய 1000  ரூபாய் நோட்டு

புதிய 1000 ரூபாய் தாள் விரைவில் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி  வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதியன்று, கருப்புப் பண ஒழிப்பு  நடவடிக்கையாக, உயர்  மதிப்பு  கொண்ட  ரூபாய்  நோட்டுகள் செல்லாது என   பிரதமர்  மோடி அறிவித்தார் .

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் தடை செய்யப்பட்டு, அவை வங்கிகள் வழியாக, திரும்பப் பெறப்பட்டு, ரிசர்வ்  வங்கியில்   ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய  ரூபாய்  நோட்டுகள் :

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்பு, புதிய 2000  மற்றும் 5௦௦ ரூபாய்  நோட்டை  வெளியிட்டது ரிசரவ் வங்கி. இந்நிலையில், தற்போது, புதிய ரூ.1000 நோட்டுகளை புழக்கத்தில் விட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்  முடிவு செய்துள்ளதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது.


புதிய பாதுகாப்பு அம்சங்கள்
புதியதாக வெளிவரவுள்ள, ரூ.1000  நோட்டுகளில்,  பல  பாதுகாப்பு  அம்சங்கள்  கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும்  புதிய  1௦௦௦  ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி  மிகவும் தீவிரப்படுத்தப்பட்டு,விரைவில்  புழக்கத்தில்  கொண்டு வர  உள்ளதகாவும்  தகவல்  வெளியாகி உள்ளது 

ரூ.100 மற்றும் ரூ.50

இதற்கு அடுத்தபடியாக ,ரூ.100 மற்றும் ரூ.50 புதிய நோட்டுகளும் விரைவில் அச்சடிக்கப்பட்டு   புழக்கத்தில்  விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக  தகவல்  வெளியாகி உள்ளது

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!