ரோபாட்களுக்கும் இனி வரி.......மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அதிரடி .......!

First Published Feb 21, 2017, 12:36 PM IST
Highlights


ரோபாட்களுக்கும் இனி வரி.......மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அதிரடி .......!

மனித  மூளைக்கு  மட்டுமே வேலை

வளர்ந்து  வரும்  விஞ்ஞான  உலகில், மனித மூளைக்கு மட்டுமே வேலை  அதிகரித்து  உள்ளது.  அதாவது விஞ்ஞான  வளர்ச்சி மற்றும் புது புது கண்டுப்பிடிப்புகளுக்கு, மனித  மூளை  மட்டுமே  காரணமாக  உள்ளது.  உடல்  உழைப்பு  என்பது   குறைய தொடங்கியது.

கார் தயாரிப்பு :
தற்போதைய  சூழலில், கார் தயாரிப்பு தொடங்கி ஐ.டி., பணிகள் வரையிலும் ரோபாட்கள் எனப்படும் இயந்திர மனிதர்கள் பயன்படுத்தப்பட தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக  பல  நிருவனங் களில்  வெகுவாக  ஆட்குறைப்பு  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மைக்ரோசாஃப்ட் அதிபர் பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார் .

மைக்ரோசாஃப்ட் அதிபர் பில் கேட்ஸ்

மனிதர்களின்  வேலையை பறித்து, அவர்களின்  செயலை  செய்யும்  ரோபோக்களுக்கு  வரி விதிக்க வேண்டும் எனவும், மனிதர்களுக்கு விதிக்கப்படுவதைப் போல, வருமான வரி, கார்ப்பரேட் வரி, உள்ளிட்டவை இயந்திர வேலையாட்களுக்கும் வசூலிக்கப்பட வேண்டும் என  அவர்  கருத்து  தெரிவித்துள்ளார் .

 

click me!