
இந்தியப் பெண்களிடையே குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று தேசிய குடும்ப சுகாதார சர்வே(என்எப்ஹெச்எஸ்) அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அதாவது 2015-16ம் ஆண்டில் 2.2 என்ற ஒட்டுமொத்த கருஉறுதல் விகிதம் தற்போது 2 சதவீதமாகக் குறைந்துள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலை மாறி ஒரு குழந்தை பெற்றாலே போதும் என்ற மனநிலைக்கு பெண்கள் வந்துள்ளனர்.
தேசிய குடும்பநல சர்வேயின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
25 வயது முதல் 49 வயதுள்ள பெண்களிடையே குழந்தை பெற்றுக்கொள்ளும் சராசரி வயு 21.2 ஆக இருக்கிறது. இதில் 7 சதவீதம்பேர் 15 முதல் 19வயதுக்குள்ளாகவே கருவுறுகிறார்கள். இது 2015-16ம் ஆண்டிலிருந்து ஒரு சதவீதம் குறைந்துள்ளது. நான்கில் ஒருபகுதி அதாவது 23 சதவீதம் திருமணமான பெண்கள் 15 முதல் 49 வயதுள்ளவர்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்றாலே போதும் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் பெண்கள் கருவுறுதல் விகிதம் 1.1. சதவீதமாகவும் அதாவது ஒரு குழந்தைக்கு மட்டுமே தயாராக இருப்பதாகவும், பிஹாரில் 3 குழந்தைகள் வரை பெண்கள் பெறத் தயாராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தென் மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள், வட மாநிலங்களில் பெண் ஒருவர் இரு குழந்தைகள் அல்லது ஒரு குழந்தை மட்டுமே பெறுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்கடந்த 1992-93 முதல் 2019-21வரையிலான காலகட்டத்தில் பெண்களிடையே குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வம் 3.4 குழந்தைகளில் இருந்து 2.0 குழந்தைகளாகச் சுருங்கிவிட்டது. கிராமப்புறங்களில் பெண்களிடையே குழந்தைப் பேறு ஆர்வம் 3.7 என்ற நிலையிலிருந்து 2.1 ஆகக் குறைந்துவிட்டது
நகர்ப்புறங்களில் 1992-93ம் ஆண்டில் 2.7 அதாவது 3 குழந்தை வரை பெறுவதற்கு விருப்பமாக இருந்த பெண்கள், 2019-21ம் ஆண்டில் 1.6 குழந்தை அதாவது ஒரு குழந்தை அல்லது 2 குழந்தை பெறுவதற்கு மட்டுமே தயாராக உள்ளனர் மதரீதியான சர்வேயில், இந்துக்களிடையேதான் ஒரு குழந்தைக்கும் 2-வது குழந்தைக்கும் இடையிலான இடையே குறைவாக இருக்கிறது. அதாவது முதல் குழந்தை பிறந்தபின் 32 மாதத்தில் 2-வது குழந்தைக்கு பெண்கள் தாயாகிறார்கள்.
ஜெயின் சமூகத்தில் முதல் குழந்தை பிறந்தபின் 48 மாதங்களுக்குப்பின்புதான் 2-வது குழந்தைக்கு பெண்கள் தயாராகிறார்கள். இது அதிகபட்ச இடைவெளியாகும்.நான்கில் ஒருபங்கு பெண்கள் 23 சதவீதம் திருமணமான பெண்கள் 15 முதல் 49 வயதில் இருப்போர், 2-வது குழந்தை வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
12 சதவீத பெண்கள் குழந்தை பெறுதல் வேகமாக இருக்க வேண்டும் என்றும், 10 சதவீதம் பேர் ஒரு குழந்தைக்கும் 2-வது குழந்தைக்கும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இடைவெளி தேவை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் 32 சதவீதம் பெண்கள் ஒரு குழந்தையே போதும் என்றும், 38 சதவீதம் பேர் கருத்தடை செய்ய விரும்பவதாகத் தெரிவித்துள்ளனர்
திருமணமான அதிக வயதுள்ள பெண்கள்தான் ஒரு குழந்தைக்கு மேல் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். 15 வயதுமுதல் 24வயதுள்ள 25 சதவீத திருமணமான பெண்கள் ஒரு குழந்தை மேல் தேவையில்லை என்றும், 25 முதல் 34 வயதுள்ள 66 சதவீத பெண்கள் 66 சதவீதமும், 35 முதல் 49வயதுள்ள பெண்கள் 89 சதவீமும் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் சென்று குழந்தை பெற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது முன்பு 79 சதவீதமாக இருந்து தற்போது 89 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் 87 சதவீதமாகவும், நகர்பப்ுறங்களில் 94 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.