
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலைக்கு எடுக்க வேண்டும் என்று அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது “ மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், துறை வாரியாக பிரதமர் மோடி ஆட்கள் பற்றாக்குறை, மனித வளம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வையடுத்து, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை அரசு வேலைக்கு தீவிரமான வேகத்தில் எடுக்க வேண்டும் என்று அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 4 நாட்களுக்கு முன் தெலங்கானா அமைச்சரும்,டிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவருமான கேடி ராமராவ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் “ தெலங்கானா அரசு 1.32 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. அடுத்ததாக ஒரு லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறது.
மக்களுக்கு அளித்த வாக்குறுதி அடிப்படையில் நாங்கள் அரசு நடத்துகிறோம். வெறும்வாய்பேச்சோடு நிறுத்திவிடவில்லை. உங்களின் திறமையற்ற முடிவு, திறனற்ற பொருளாதாரக் கொள்கைகளால் புதிய வேலைவாய்ப்பு உருவாவதற்குப் பதிலாக வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா லாக்டவுனும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, வேலையிழப்பு ஏற்பட்டது. மத்திய அரசில் 16 லட்சம் காலியிடங்கள் இருக்கிறது எப்போது நிரப்பப்போகிறீர்கள்” எனக் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.