பேரன் ரோஹன் மூர்த்தி வசம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 15,00,000 பங்குகளை வைத்திருக்கிறார். இது நிறுவனத்தின் 0.04 சதவீதம் பங்குகள் ஆகும். இதன் மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நாராயணமூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாகக் குறைந்து 1.51 கோடி பங்குகளாக உள்ளது.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி அண்மையில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தார். வாரத்தில் 70 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற அவரது பேச்சு சர்ச்சையானது.
இப்போது வெறொரு காரணத்திற்காக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார். பிறந்து நான்கு மாதமே ஆன தனது பேரன் ஏகாக்ர ரோஹன் மூர்த்திக்கு சுமார் 240 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பரிசாக அளித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
இபோபது ரோஹன் மூர்த்தி வசம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 15,00,000 பங்குகளை வைத்திருக்கிறார். இது நிறுவனத்தின் 0.04 சதவீதம் பங்குகள் ஆகும். இதன் மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நாராயணமூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாகக் குறைந்து 1.51 கோடி பங்குகளாக உள்ளது.
கடலூரில் லஞ்சம் வாங்கி கல்லா கட்டும் டாஸ்மாக் ஊழியர்கள்! வைரல் வீடியோ!
ரோஹன் மூர்த்தி மற்றும் அபர்ணா கிருஷ்ணன் ஆகியோருக்கு நவம்பர் 2023 இல் பிறந்த ஏகாரா, நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி தம்பதியின் மூன்றாவது பேரக்குழந்தை. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை கரம்பிடித்த அக்ஷதா மூர்த்திக்குப் பிறந்த இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஏகாக்ராவின் பெயர் மகாபாரதத்தில் அர்ஜுனின் கதாபாத்திரத்தைக் குறிக்கும் பெயர் என்று கூறப்படுகிறது. சமஸ்கிருத வார்த்தையான 'ஏகாக்ரா' என்றால் அசைக்க முடியாத கவனம் மற்றும் உறுதிப்பாடு என்று பொருள்.
1981ஆம் ஆண்டு வெறும் 10,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம் தற்போது இந்தியாவின் 2வது பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்துள்ளது.
எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான சுதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கிய ஆரம்ப நாட்களில் முக்கியப் பங்கு வகித்தார். இன்ஃபோசிஸ் அறக்கட்டளையை 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி வந்தார். 2021ஆம் ஆண்டு டிசம்பரில் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சமீபத்தில் அவர் ராஜ்யசபா உறுப்பினரானார்.
பெண்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன்! திறன் பயிற்சியுடன் கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம்!