இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் நிராமயா வெல்னஸ் ரிட்ரீட்ஸ் கும்பகோணத்தில் புதிய வர்த்தகத்தில் கையெழுத்திட்டதன் மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆடம்பர ஆரோக்கியம் மற்றும் விருந்தோம்பல் பிராண்டான நிராமயா குழுமம், அரசலாறு ரிசார்ட்ஸ் & ஸ்பா பிரைவேட் லிமிடெட் உடன் நிர்வாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஓய்வு இடங்களுக்கு மாற்றாக மற்றும் விதிவிலக்கான முதன்மையான ஆரோக்கிய அனுபவங்களை வழங்குவதே நிராமயாவின் உறுதிப்பாடு ஆகும்.
இந்த அறிவிப்பு குறித்து நிராமயா வெல்னஸ் ரிட்ரீட்ஸின் தலைமை செயல் அதிகாரி ஆலன் மச்சாடோ கூறுகையில், ‘எங்கள் நிறுவனமான நிராமயா பிராண்டுகளை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதை புதிய மைல்கல்லாக பார்க்கிறோம். இந்த வர்த்தக் ஒப்பந்தமானது உள்ளூர் கலாச்சாரம் மற்றும் நிலையான ஆடம்பரத்திற்கான எங்களது உறுதிப்பாட்டை காட்டுகிறது.
எல்லா சீசன்களிலும் கும்பகோணம் ஒரு பிரபலமான சுற்றுலா அடையாளமாக உள்ளது. இந்த அமைதியான சூழலில் எங்களது நிராமயா வெல்னஸ் ரிட்ரீட்ஸில் தங்க விரும்பும் பயணிகளின் முதல் தேர்வாக எங்களது நிராமயா இருக்கும். சிறந்த விருந்தோம்பல் மற்றும் சேவைகளுக்கான எங்கள் அர்ப்பணிப்பும், மேலும் இந்தியாவின் முன்னணி நல்வாழ்வு இருப்பிடமாகவும், ஓய்வெடுக்க சரியான இடமாகவும் இருக்கும் என்பதற்கு உறுதி அளிக்கிறோம்.
கும்பகோணத்தில் உள்ள நிராமயா வெல்னஸ் ரிட்ரீட்ஸ் 63 அறைகளை உள்ளடக்கியதாக இருக்கும், இது திருச்சி மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையங்களில் இருந்து எளிதில் அடையக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இத்துடன் பல உணவகங்கள், உடற்பயிற்சி மையம், நீச்சல் குளங்கள், குலத்துடன் கூடிய தனியார் வில்லாக்கள், விரிவான ஸ்பா என்று பல வசதிகளுக்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம்” என்று கூறினார்.
அரசலாறு ரிசார்ட்ஸ் & ஸ்பா பிரைவேட் லிமிடெட் குழுமத் தலைவர் ரமேஷ் கூறுகையில், “தற்போது உயர்தர ஹோட்டல்கள் இல்லாத கும்பகோணத்திற்கு நிராமயா வரப்பிரசாதமாக இருக்கிறது. அவர்களுடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.எங்கள் குழுவிற்கு ஒரு பெரிய தொழில் கூட்டாண்மையாக கருதுகிறோம். பெருமைப்படுகிறோம்.
இது கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு பயனளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த ரிசார்ட் உணவு வகைகள், சேவைகளுடன் ஒரு தனித்துவமான பிராந்திய பண்பாட்டுடன் ஒரு தனித்துவமான கலவையை வழங்க உள்ளது. இது ஒரு உண்மையான அதிவேக அனுபவத்தை உறுதியளிக்கிறது.
கும்பகோணம் அதன் கலாச்சார மற்றும் கட்டிடக்கலைக்காக நன்கு அறியப்பட்டதாகும். விருந்தினர்களின் விடுமுறையை பயனுள்ளதாக ஆக்குகிறது. இத்துடன், நிராமயா விருந்தினர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக அமைந்துள்ளது'' என்றார்.
இயற்கையின் அமைதியான அரவணைப்பில் தனித்துவமான கலாச்சார அடையாளத்தை காட்டுகிறது. பல பாராட்டுக்களைப் பெற்ற புகழ்பெற்ற நிராமயா ஸ்பா மற்றும் ஆரோக்கிய மையம், மனதையும், உடலையும், ஆன்மாவையும் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியூட்டவும், காலத்தால் மதிக்கப்படும் ஆயுர்வேதம் மற்றும் யோகா உட்பட புத்துயிர் அளிக்கும் சிகிச்சைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவளம், தேக்கடி, அதிரப்பள்ளி, கண்ணூர், கேரளா, கோஹிமா, பெங்களூரு, குமரகோம் ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது நிராமயா வெல்னஸ் ரிட்ரீட்ஸ்.
குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?