முதல் முறையாக 14 ஆயிரம் கோடியைத் தாண்டிய 'சிப்' மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்

By SG BalanFirst Published Apr 15, 2023, 3:56 PM IST
Highlights

மார்ச் மாதத்தில், சில்லறை முதலீட்டாளர்கள் ரூ.14,276 கோடியை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.

வளர்ந்து வரும் சில்லறை முதலீட்டாளர் முதிர்ச்சியின் அடையாளமாக, மியூச்சுவல் ஃபண்டில் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டம் வழியிலான மாதாந்திர வரவு, சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் மார்ச் மாதத்தில் முதல் முறையாக ரூ.14,000 கோடியைக் கடந்தது. ஏப்ரல் 1 முதல் வரிவிதிப்பு விதிமுறைகள் மாறும் நிலையிலும் முதலீட்டாளர்கள் இந்த நிதிகளில் முதலீடு செய்ய விரைந்ததால், கார்ப்பரேட் பாண்ட் திட்டங்கள் உட்பட நிலையான வருமானத் திட்டங்களில் இந்த மாதம் வலுவான முதலீடுகள் சேர்ந்துள்ளன.

முந்தைய ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக ரூ.13,856 கோடியாக இருந்த மாதாந்திர வராக்கடனுடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில், சில்லறை முதலீட்டாளர்கள் ரூ.14,276 கோடியை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர் என தொழில்துறை அமைப்பான ஆம்ஃபி (Amfi) வெளியிட்ட தரவு காட்டுகிறது. மாதத்தில் 22 லட்சம் புதிய சிப் முதலீடுகள் வந்துள்ள நிலையில், மொத்த கணக்கு சுமார் 6. 4 கோடியாக உள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 கோடியாக இருந்த சிப் கணக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

Gold Rate Today : மக்களே தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்தது.!

"உலகளாவிய அரசியல் காரணங்கள் மற்றும் பணவீக்கம் காரணமாக ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் முதலீட்டாளர்களின் அதிகரிப்பு, நெகிழ்வான முதலீட்டாளர் நடத்தைக்கு வித்திட்டுள்ளது. தொற்றுநோய்களின் போது முதலீடுகளின் டிஜிட்டல் சேனல்களை வேகமாக ஏற்றுக்கொண்டது சிப் கணக்குகளில் இந்த வலுவான எழுச்சிக்கு உதவி இருக்கிறது" என்று ஆம்ஃபி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி என் எஸ் வெங்கடேஷ் சொல்கிறார்.

2023ஆம் நிதி ஆண்டில் சந்தை நிலையற்ற போக்குடன் இருந்தபோதிலும், ஈஎம்எஃப் எனப்படும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் சேர்ந்து மொத்தமாக ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் நிகர வரவுகளை எடுத்ததாக தொழில்துறை தரவு காட்டுகிறது. மார்ச் 2023ல் கார்ப்பரேட் பாண்ட் திட்டங்களில் ரூ.15,600 கோடியும், வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ரூ. 6,500 கோடியும், டைனமிக் பாண்ட் ஃபண்டுகளில் ரூ.5,661 கோடியும் நிகர வரவாக வந்துள்ளன.

கிட்டத்தட்ட ரூ.57,000 கோடி நிதி வெளியேற்றியுள்ளது. அதே சமயம் பணச் சந்தை நிதிகளுக்கான தொடர்புடைய எண்ணிக்கை முதலீடுகள் ரூ.11,422 கோடியாகவும், அல்ட்ரா-குறுகிய கால நிதி முதலீடு ரூ.10,281 கோடியாகவும் இருந்தது. இந்த மீட்டெடுப்புகளில் பெரும்பாலானவை முன்கூட்டிய வரி செலுத்துவதற்கான கடைசி தேதிக்கு முந்தையவை ஆகும்.

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு கோடி ரூபாய்! ஹைதராபாத் பக்தர்கள் செலுத்திய காணிக்கை

click me!