2020-21 நிதியாண்டிலிருந்து முகேஷ் அம்பானியின் சம்பளம் பூஜ்ஜியம் தான். தனது பங்குகளையும் அவர் விற்கவில்லை. அப்படியானால், அவர் தனது செலவுகளை எவ்வாறு நிர்வகிக்கிறார் என்று தெரியுமா?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்கார தொழிலதிபராக இருக்கிறார். உலக பில்லியனர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆண்டறிக்கையில், கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து முகேஷ் அம்பானி எந்த சம்பளமும் வாங்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
2020-21 நிதியாண்டிலிருந்து அவரது சம்பளம் பூஜ்ஜியம் தான். தனது பெயரில் உள்ள பங்குகளையும் அவர் விற்கவில்லை. அப்படி என்றால் அவர் தனது செலவுகளை எப்படி நிர்வகிக்கிறார்?
முகேஷ் அம்பானியின் முக்கிய வருமானம் டிவிடெண்ட் எனப்படும் ஈவுத்தொகைதான். ஈவுத்தொகை என்பது ஒரு நிறுவனத்தின் லாபத்தின் ஒரு பகுதி. இது அதன் பங்குதாரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. உதாரணமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.1,000 கோடி லாபம் ஈட்டினால், அது ரூ.500 கோடியை நிறுவனத்தில் மீண்டும் முதலீடு செய்து, மீதமுள்ள ரூ.500 கோடியை அதன் பங்குதாரர்களுக்கு விநியோகிக்கலாம். இந்த வகையில் நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் முகேஷ் அம்பானி டிவிரெண்ட் தொகையில் கணிசமான பகுதியைப் பெற்று வருகிறார்.
பெண்களுக்கு மட்டும் இந்த சூப்பர் திட்டம்! வெறும் 1000 டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!
அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் நிறுவனத்தில் 50.39% பங்குகளை வைத்துள்ளனர். முகேஷ் அம்பானி 0.12% பங்குகளை மட்டுமே வைத்திருக்கிறார். அதாவது 80 லட்சம் பங்குகள். முகேஷ் அம்பானியின் தாய் கோகிலாபென் அம்பானி, மனைவி நீதா அம்பானி, மகள் இஷா, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த் உள்ளிட்ட அம்பானி குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்துள்ளனர்.
ரிலையன்ஸ் பொதுவாக ஒரு பங்கிற்கு ஆண்டுக்கு ₹6.30 முதல் ₹10 வரை டிவிடெண்ட் கொடுக்கிறது. எனவே, அம்பானிக்கு டிவிடெண்ட் மூலம் மட்டுமே பெரிய தொகை வருமானமாகக் கிடைக்கும்.
இது தவிர, அம்பானி வேறு வழிகளிலும் சம்பாதிக்கிறார். கணிசமான வருவாயை ஈட்டும் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தக்காரராக இருக்கிறார். பல்வேறு தனியார் நிறுவனங்களில் தனிப்பட்ட முதலீடுகளை வைத்துள்ளார்.
எடுத்துக்காட்டாக, 2023-24 நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு பங்கிற்கு ரூ.10 ஈவுத்தொகையை அறிவித்தது. 80 லட்சம் பங்குகள் கொண்டுள்ள முகேஷ் அம்பானிக்கு தனிப்பட்ட முறையில் இந்த ஈவுத்தொகை மூலம் மட்டும் ரூ.8 கோடி கிடைத்திருக்கும். விளம்பரதாரர் குழுவின் வருமானத்தையும் சேர்த்து, 2023-24 இல் அம்பானி குடும்பத்தின் மொத்த ஈவுத்தொகை வருவாய் சுமார் 3,322 கோடி ரூபாய். இப்படித்தான் அம்பானி சம்பளம் ஏதும் வாங்காமலே பல கோடிகளை ஈட்டி வருகிறார்.
இனி டெபாசிட் கணக்கில் 4 நாமினிகளை சேர்க்கலாம்! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!