mukesh ambani: Reliance Retail RJIO : ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் நிறுவனங்களுக்காக மிகப்பெரிய ஐபிஓவுக்கு திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் நிறுவனங்களுக்காக மிகப்பெரிய ஐபிஓவுக்கு திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜியோ, ரிலையன்ஸ் ரீடெயில்
ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ்(ஆர்ஆர்விஎல்) ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொன்றின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.50ஆயிரம் கோடி முதல் ரூ.75ஆயிரம் கோடிவரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளார். நிறுவனங்களின் புரோமோட்டர்கள் குறைந்தபட்சம் 10 சதவீதப் பங்குகளை விற்பார்கள் எனத் தெரிகிறது.
அறிவிப்பு எப்போது
இந்த இரு நிறுவனங்களுக்கான ஐபிஓ அறிவிப்பை முகேஷ் அம்பானி நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிலையன்ஸ் ஜியோ, ஆர்ஆர்விஎல் நிறுவனங்கள் ஒரேநேரத்தில் உலகளவில் லிஸ்டிங் செய்யப்பட உள்ளன, அமெரி்க்காவின் நாஷ்டாக்கில் இரு நிறுவனப் பங்குகளும் லிஸ்டிங் செய்யப்படலாம்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வந்தபின், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனங்களை பட்டியலிடுவதற்கான வரைவு அறிக்கையை ரிலையன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ரீடெயில் குறித்த அறிவிப்பும், அதன்பின் ரிலையன்ஸ் ஜியோ குறித்த அறிவிப்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 33 சதவீதப் பங்குகளை ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட 13 முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. இவர்களும் ஐபிஓ வெளியிடுவார்கள் எனத் தகவல்கல் தெரிவிக்கின்றன.
2023ம் நிதியாண்டு மதிப்பின்படி ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் மதிப்பு ரூ.8லட்சம் கோடியாகும், ரிலையன்ஸ் ஜியோவின் சந்தை மதிப்பு ரூ.7.50 லட்சம் கோடியாகும். ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துக்கு மட்டும் இந்தியாவில் 14,500 கிளைகள் உள்ளன. மின்னணு வர்த்தகத்திலும் ரிலையன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு இதுவரை 42 கோடி வாடிக்கையாளர்கள் என உலகிலேயே மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழ்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய ஐபிஓ
இந்தியாவிலேயே இதுவரை மிகப்பெரிய ஐபிஓ என்பது 2021ம் ஆண்டு பேடிஎம் நிறுவனம் நடத்தியதுதான் அப்போது ரூ.18,300 கோடி முதலீடு கிடைத்தது. அதைத் தொடரந்து கோல் இ்ந்தியா 2010ம் ஆண்டு ஐபிஓ வெளியீட்டில் ரூ.15,500 கோடி கிடைத்தது.
2008ம் ஆண்டு ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ஐபிஓவில் ரூ.11,700 கோடி கிடைத்து. இப்போது எல்ஐசி ஐபிஓ மூலம் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.