
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி ,ஆண்டுக்கு ரூ.3.5 கோடி ஊதியம் பெற்று வந்த இளைஞர் ஒருவர் திடீரென வேலையிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தான் வேலையைவிட்டு விலகியதற்கு அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா, “ வேலை போர்(bore)அடிக்கது” அதான் வேலையைவிட்டு நின்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த மைக்கேல் லின் என்பவர்தான் நெட்பிளிக்ஸில் இருந்து வேலையை உதறியுள்ளார். இதற்கு முன் அமேசானில் பணியாற்றிய மைக்கேல் கடந் 2017ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் மூத்த சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேலையில் சேர்ந்தார். மைக்கேல் லினுக்கு ஆண்டுக்கு 4.50 லட்சம் டாலர் ஊதியம். அதாவது இந்திய மதிப்பில் ரூ.3.50 கோடி.
சொகுசான வாழ்க்கை, உணவு, கைநிறைய ஊதியம் ஆகியவைகிடைத்த நிலையில், திடீரென வேலையிலிருந்து மைக்கேல் லின் விலகியுள்ளார்.
அதுகுறித்து மைக்கேல் லின் லிங்டுஇன் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு 4.50 லட்சம் டாலர் ஊதியத்தில் சீனியர் சாஃப்ட்வேர் எஞ்சினராக இருந்தேன்.5 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் அந்த வேலையிலிருந்து விலகிவிட்டேன். இலவசமாகஉணவு, அளவுக்கு அதிகமான ஊதியம், ஓய்வு நேரம், பெரிய நிறுவனம் என எனக்குக் கிடைத்தது. இருப்பினும் எனக்கு இந்த வேலை “போர் அடித்ததால் நான் வேலையைவிட்டு நின்றுவிட்டேன்”
நான் வேலையிலிருந்து ராஜினாமா செய்யப் போகிறேன் என்றவுடன் முதலில் என்னுடைய பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். உன்னுடைய கடின உழைப்பை தூக்கி எறியப் போகிறாரா என்றனர். 2-வதாக என்னுடைய வழிகாட்டியும் எதிர்த்தார். அடுத்த பணியை உறுதி செய்யாமல் வேலையிலிருந்து ராஜினாமா செய்யாதீர்கள். அடுத்த வேலைக்கான ஊதியத்தை உறுதி செய்தபின் செல்லுங்கள் என்றார். ஆனால், என்னுடைய மேலாளரிடம் என் முடிவை அறிவிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பிருந்து தீவரமாக ஆலோசித்து ராஜினாமா செய்தேன்.
ஆரம்ப காலகட்டத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு பொருட்களைப் பற்றியும் ஊழியர்கள் நன்கு தெரிந்து கொள்ளவும், புரிந்துகொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் கொரோனாவுக்குப்பின்.எனக்காக நான் வேலை செய்ய முடிவில்லை. எனக்கு வேலையில் நீடிக்க பிடிக்கவி்ல்லை . அதனால்வேலையை ராஜினாமா செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.