மாருதி சுசுகி எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. வெளியீட்டு விவரம்

By Nandhini SubramanianFirst Published Jan 24, 2022, 3:30 PM IST
Highlights

மாருதி சுசுகி நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் களமிறங்கும் பணிகளை துவங்கிவிட்டது. வரும் ஆண்டுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்கள் பற்றிய விவரங்கள் மிக ரகசியமாக வைத்து இருக்கிறது. 

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மாருதி சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை 2024 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் வை.வை.8 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது இந்தியாவில் டாடா பன்ச் இ.வி. மாடலுக்கு போட்டியாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

மாருதி சுசுகி எலெக்ட்ரிக் கார் சுசுகி - டொயோட்டா நிறுவனங்கள் கூட்டணியின் கீழ் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாடல் டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தைகளிலும் இந்த மாடல் ஏற்றுமதி செய்யப்படலாம்.

இந்த எலெக்ட்ரிக் கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் அல்லது டொயோட்டாவின் குறைந்த விலை டி.என்.ஜி.ஏ. மாட்யூலர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படலாம். இரு பிளாட்ஃபார்ம்களும் இந்திய சந்தைக்கு ஏற்ப பலவிதங்களில் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன. இதே பிளாட்ஃபார்ம் மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் முழு சார்ஜ் செய்தால் 250 முதல் 350 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலுக்கான பேட்டரி டொஷிபாவின் குஜராத் ஆலையில் இருந்து வாங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

click me!